உங்களுக்கு அதிக தன, தானிய லாபங்கள் தரும் அற்புதமான மந்திரம் இதோ

mahalakshmi

சிறப்பான வாழ்க்கை வாழ உதவும் பணத்தை மறுப்பவர்கள் உலகில் எவரும் இல்லை. பலருக்கும் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய செலவுகளுக்கு யோசித்து செலவிடும் நிலை இருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு தேவைக்கு அதிகமாகவே செல்வ வளமும் பெருகுகிறது. அதற்கு காரணம் அவர்களுக்கு செல்வக் கடவுளான மகாலட்சுமியின் அருள் அதிகம் இருப்பதே ஆகும். அந்த மகாலட்சுமி தேவியின் அருள் நமக்கும் கிடைத்து பெற்று மிகுதியான செல்வமும், சுகமும் பெற்று இன்புற வாழ உதவி செய்யும் மகாலட்சுமி அஷ்டகம் இதோ.

mahalakshmi

மகாலட்சுமி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

- Advertisement -

lakshmi

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

mahalakshmi

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித

திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா

Lakshmi pujai

செல்வ மகளான ஸ்ரீ மகாலட்சுமி தேவிக்குரியஅஷ்டகம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஒரு முறை துதிப்பவர்களுக்கு இதுவரை செய்த பாப வினைகள் அனைத்தும் நீங்குகிறது. தினமும் காலை, மாலை என இரு முறை துதிப்பவர்களுக்கு வீட்டில் செல்வச் சேர்க்கையும், தானியங்கள் பெருக்கம் ஏற்படும். வறுமை நிலை அணுகாது காக்கும். தினந்தோறும் மூன்று முறை துதித்து வழிபடுபவர்களின் இதயத்திலும், வீட்டிலும் மங்களங்கள் அருளும் தெய்வமான மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறி வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் யோகத்தை அருள்வார்.

மகான்களுக்கும், ஞானிகளுக்கும் செல்வத்தின் தேவை இல்லை. ஆனால் இல்லற வாழ்வில் இருக்கின்ற மனிதர்களுக்கு செல்வம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எனவே தான் சாமானிய மக்கள் செல்வமும், சுகபோகங்களையும் பெறுவதற்கு அருள்புரியும் தெய்வமான மகாலட்சுமி குறித்து பல மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் இயற்றிருக்கின்றனர். அப்படியான ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த அஷ்டக மந்திரம் தான் இந்த மகாலட்சுமி அஷ்டகம். இந்த அஷ்டகத்தை தினமும் உளமார துதிப்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருட்கடாட்சம் என்றும் நிலைத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பொருள் சேர்க்கை அதிகரிக்கும் பஞ்சமி திதி மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mahalakshmi ashtakam in Tamil. It is also called as Lakshmi mantras in Tamil or Selvam sera manthirangal in Tamil or Mahalakshmi mantras in Tamil or Laksmi kadatcham kidaikka in Tamil or Lakshmi manthirangal in Tamil.