உங்களுக்கு பொருள் சேர்க்கை அதிகரிக்க பஞ்சமி திதியில் இம்மந்திரம் துதியுங்கள்

vilakku

நவீன விஞ்ஞானம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பாகவே புவியியல், வானியல் போன்ற துறைகளில் பல விஞ்ஞான உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு கூறியவர்கள் நமது சித்தர்கள், ஞானிகள் ஆவர். வானில் நட்சத்திரங்கள், கிரகங்களின் அடிப்படையில் தினம் அல்லது திதி, வாரம், வருடம் போன்ற கால நிர்ணயத்தை உண்டாக்கினார். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். இந்த பஞ்சமி திதி தினத்தன்று கூற வேண்டிய மந்திரம் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

panjami devi

பஞ்சமி திதி மந்திரம்

ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ

பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி வாய்ந்த திதி தினமாகும். அந்த பஞ்சமி திதி தினத்தன்று காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி, ற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே, பஞ்சமி சக்தி தேவியை மேற்கூறிய மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதித்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். பொன், பொருள் ஆகியவற்றின் சேர்க்கை உண்டாகும்.

DEEPAM

காலம் என்பது எல்லையற்றது. அனைத்து விடயங்களும் காலமாற்றத்தில் மாறுதல் அடைகின்றன அல்லது அழிகின்றன. தெய்வீக சக்தி வாய்ந்த நமது சித்தர்கள் இந்த காலத்தையும் வென்று நிற்கும் பல சூட்சம மந்திர தந்திரங்களை கண்டறிந்தனர். அதில் நட்சத்திர திதி வழிபாடு மிகவும் ஆற்றல் வாய்ந்தது எனக் கருதி மக்கள் பயன்படுத்தி நலம் பெற அவற்றை உபதேசித்தனர். அதில் ஒன்று தான் பஞ்சமி திதி வழிபாடு ஆகும். இந்த பஞ்சமி திதி தினத்தில் மேற்கூறிய முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயமான பலன்கள் உண்டு.

இதையும் படிக்கலாமே:
நினைத்ததை நிச்சயமாக நிறைவேற்றும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panjami thithi mantra in Tamil. It is also called as Panjami thithi valipadu in Tamil or Kariya vetri manthiram in Tamil or Tithi mantras in Tamil or Panjami tithi palan in Tamil.