பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாரை வணங்கக்கூடிய நாளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக் கூடிய அன்னையை இன்றைய நாளில் வழிபடும் பொழுது நம்முடைய குடும்பத்தில் வறுமை நிலை மாறி செல்வ செழிப்பான நிலைக்கு செல்லும் வாய்ப்பு பெருகும் என்பது தான். இந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டின் முக்கிய நோக்கம் அப்படியான இந்த நாளில் நாம் செய்யக் கூடிய இன்னொரு செயல் நம்முடைய செல்வ செழிப்பை இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆடி நான்காம் வெள்ளி வழிபாடு
இன்றைய தினம் பல அற்புத தினங்களை கொண்டுள்ளது. ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரியது. அதிலும் வெள்ளைக்கிழமை மிக மிக விசேஷமானது. அப்படியான ஒரு வெள்ளி தான் இன்றைய ஆடி வெள்ளி இத்துடன் பஞ்சமி வந்திருப்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாராகி அன்னையை வழிபடுபதற்கு பஞ்சமி திதி உகந்தது. அதுவும் வெள்ளிக்கிழமையில் இந்த திதி வந்து இருப்பது இன்னும் விசேஷம்.
அது மட்டும் இன்றி இன்று நான்கு நட்சத்திரங்கள் ஒருசேர வந்திருக்கிறது. அதுவும் ஒரு நாள் முழுவதிலும் இருக்கிறது இத்தகைய அற்புதங்கள் அனைத்தும் ஒன்றாக வாய்த்த இந்த திருநாளை நாம் தவறாமல் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நம்முடைய செல்வ நலனு பெருக்கிக் கொள்ள முடியும். இது மட்டும் இன்றி வீட்டில் ஏற்படும் வீண் விரயங்கள் துன்பங்கள் கடன் பிரச்சனைகள் போன்றவை கூட தீரும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான ஒரு சூட்சம வழிபாட்டு முறையை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்பவர்கள் எப்போதும் போல செய்து கொள்ளலாம். அதே போல பஞ்சமி வழிபாடு விரதம் இருப்பவர்களும் அன்றைய வழிபாட்டு முறைகளை முறையாக கடைப்பிடியுங்கள். இத்துடன் சேர்த்து இன்று இரவுக்குள் இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக வாங்க வேண்டும். ஒன்று மஞ்சள் இத்துடன் தேங்காய் இரண்டையும் ஒன்றாக வாங்க வேண்டும்.
மஞ்சள் தூள் மஞ்சளாக வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்று கடையில் இதை வாங்கி மறுபடியும் வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். மஞ்சளை ஒரு கடையிலும் தேங்காய் ஒரு கடையிலும் கூட வாங்கலாம் தவறில்லை. இப்படி வாங்கி வந்த இந்த இரண்டு பொருட்களையும் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமி தாயார் மனதார வணங்கி விடுங்கள். சிறிது நேரம் இந்த இரண்டு பொருட்களும் பூஜை அறையில் இருக்கட்டும்.
அதன் பிறகு இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது சமையலுக்கு பயன்படுத்தலாம் அல்லது பூஜை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முக்கியமான சூட்சும வழிபாடு என்பது நம் வீட்டில் இருந்து வெளியில் சென்று திரும்ப வரும் போது இந்த இரண்டு பொருட்களையும் கையில் கொண்டு வர வேண்டும் அதுவும் கடையில் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு வர வேண்டும் இது தான் முக்கியம்.
இதையும் படிக்கலாமே:கஷ்டங்கள் நீங்க திருப்பதி பரிகாரம்
இந்த ஒரு சூட்சும வழிபாட்டை செய்வதன் மூலம் நமக்கு தாயாரின் அருள் சக்தி தேவியின் அருள் பஞ்சமி நாயகியான வாராகி என் அருள் அனைத்தும் கிடைத்ததோடு நம்முடைய துன்பங்கள் நீங்கி இன்பமாக செலவு செய்யப்படும் வாழக்கூடிய யோகம் அமையும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை வழி பாதை செய்து பலன் பெறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.