சில குழந்தைகள் எல்லா வகையான செயல்பாட்டிலும் படு சுறுசுறுப்பாகவும், படுசுட்டி தனமாகவும் ஆர்வத்தோடும் ஈடுபாடு காட்டும். அதாவது பாட்டு, நடனம், விளையாட்டு, பேச்சுத் திறமை, விதாண்டாவாதமாக கேள்வி கேட்கும் திறமை, இப்படி படிப்பைத் தவிர மற்ற எந்தெந்த விஷயங்கள் இருக்கின்றதோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் தான். ஆனால் படி என்று சொல்லிவிட்டால் போதும், நிற்காமல் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்று விடுவார்கள். சில குழந்தைகள் படிப்பில் தானாகவே அதிக கவனம், அதிக ஆர்வம் எடுத்து ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். ஒவ்வொரு குழந்தைகளின் சுபாவம் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது எந்த ஒரு தவறும் இல்லை. குழந்தைகளின் மனம் ‘கள்ளம் கபடம் இல்லாதது தானே!’ அவர்கள் செய்யும் செயல்பாட்டில் எந்த ஒரு உள்நோக்கமும், பின்னணியும் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலம் என்பது நல்ல படிப்பில் தான் அமைய முடியும். அந்த படிப்பை கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் காட்டும் குழந்தைகளை பற்றி எந்த கவலையும் இல்லை. சுறுசுறுப்பான அறிவாற்றல் இருந்தும், படிப்பதில் ஆர்வம் செலுத்த முன்வராத குழந்தைகளை என்ன செய்வது? முதலில் அவர்களுக்கும் படிப்பதினால் எதிர்காலத்தில் என்ன பயன் என்பதை புரிய வைக்க வேண்டும். ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்கான பரிகாரத்தை நாம்தான் செய்ய வேண்டும். ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலம் அவர்களையும் சுலபமாக படிக்க வைத்துவிடலாம். அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
உங்களது குழந்தைகள் படிப்பில் ஏறுமுகத்தில் செல்வதற்கு, அந்த ஆறுமுகனை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒரு வழிபாடு. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று, உங்கள் குழந்தையது ஏதாவது ஒரு தமிழ் புத்தகத்தை எடுத்து, பூஜை அறையில் வைத்து, தமிழ் கடவுள் முருகனின் வாகனமான மயில் இறகு அல்லது மயிலின் உருவப்படம் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும், அதை தமிழ் புத்தகத்தின் மேல் வைத்து, பூஜை அறையில் ஒரு நெய்தீபம் ஏற்றி, நம் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் படிப்பில் இருக்கும் ஜாதக தோஷங்கள் கூட நிவர்த்தியாகி விடும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் சில குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தமிழ் மொழியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல குழந்தைகள் தமிழை ஆர்வத்தோடு தான் கற்று வருகிறார்கள் என்பதை இந்நேரத்தில் சொல்லி பெருமிதம் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக எந்த ஒரு தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுவது தானம் தான். படிப்பில் பின்தங்கிய மாணவர்களாக இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்களாக இருந்தாலும் வாரம்தோறும் வரும் வியாழக்கிழமை அன்று சூரியன் மறைவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு அதாவது வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாழை இலையில் ஐந்து வகை இனிப்பையும், இரண்டு ஏலக்காயையும் வைத்து அரச மர அடியில் இருக்கும் ஈ, எரும்பு, வண்டுகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அடுத்ததாக சில இனிப்பு வகைகளும், ஏலக்காய் சேர்த்து காய்ச்சிய பாலையும் ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும். எத்தனையோ குழந்தைகளை வளர்க்கும் ஆசிரமங்கள் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவியாக இருக்க உங்களால் முடிந்த படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதும் சிறந்த பலனை அளிக்கும். நீங்கள் செய்யும் இந்த தானங்களை உங்களது குழந்தையின் கைகளால் செய்வது சிறப்பான ஒன்று.
இப்படி எல்லாம் செய்து விட்டால் குழந்தைகள் நன்றாகப் படித்து விடுமா? என்ற கேள்வியோடு தயவுசெய்து பரிகாரங்களை செய்யாதீர்கள். இந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படுவதில்லை. அடுத்தவர்களுக்கு உதவி செய்கின்றோம். எந்தப் பலனும் நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு எவரொருவர் தான தர்ம காரியத்தில் ஈடுபடுகிறாரோ, அவரே முழுப்பலனை அடைகிறார் என்பது நிதர்சனமான உண்மை.
இதையும் படிக்கலாமே
இந்த பூவை இப்படி வைத்தால் கோடி ரூபாய் கிடைக்குமா? எப்படி?
இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Kalviyil sirakka Tamil. Kalviyil siranthu vilanga. Pariharam for good education. Pariharam for good studies.