வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வாசனை மிகுந்த பூக்கள் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். எத்தனை வருடங்கள் ஆனாலும் காய்ந்து போகாத இந்த 1 பூ வாங்கி வைத்தாலே போதும்.

mahalashmi2

முடிந்தவரை வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டில் செய்யக்கூடிய மகாலட்சுமி பூஜையில் கட்டாயமாக வாசனை மிகுந்த பூக்கள் இருக்க வேண்டும். வாசனை மிகுந்த பூக்கள் கிடைக்காதபட்சத்தில் என்ன செய்வது? வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் நம் வீட்டு பூஜை அறையில் மற்ற நாட்களிலும் கூட, வாடிய பூக்களை வைத்து பூஜை செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். பூக்களே, பூஜை அறையில் இல்லாமல் தீபம் ஏற்றினால் கூட பரவாயில்லை! ஆனால், வாடிய பூக்களை வைத்து இறைவனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

lotus

வெள்ளிக்கிழமை பூஜைக்காக பூக்கள் இல்லை, வாசனை மிகுந்த பூக்கள் கிடைக்காதபட்சத்தில்,  பூக்களை வைத்து பூஜை செய்த பலனை எப்படி பெறுவது? எத்தனை வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத பூவா! அது எந்த பூ? என்ற கேள்விக்கான விடையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகாலட்சுமிக்கு உகந்த பூ என்றால் அது தாமரை பூ. சுக்கிரன் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவர். ஒருவருடைய வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தையும் சுக்கிரனின் ஆசீர்வாதத்தையும் ஒன்றாக பெறவேண்டும். சுக்கிரனுக்கு உகந்த பொருள் வெள்ளி. மகாலட்சுமிக்கு உரிய பொருள் தாமரை.

ஆக வெள்ளியினால் செய்யப்பட்ட சிறிய தாமரை ஒன்றை வாங்கி மகாலட்சுமி பாதங்களில் வைத்து விடுங்கள். நீங்கள் வாரம் ஒருமுறை மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலும் சரி, அல்லது தினந்தோறும் மகாலட்சுமிக்கு பூஜை செய்தாலும் சரி பூக்கள் இல்லை என்றாலும் மகாலட்சுமியின் பூஜை முழுமையாக நிறைவு பெற, இந்த வெள்ளியினால் செய்யப்பட்ட சிறிய தாமரை ஒன்றே போதும். பூக்கள் கிடைக்கும் பட்சத்தில், இந்த வெள்ளித் தாமரையோடு வாசனை மிகுந்த பூக்களையும் கட்டாயம் மகாலட்சுமிக்கு சூட்டி தான் ஆக வேண்டும்.

mahalashmi3

அதோடு மட்டுமல்லாமல், பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன்பு வெள்ளியினால் செய்யப்பட்ட தாமரை வைத்து பூஜை செய்தால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து மகாலட்சுமியை உகந்த மற்றொரு பொருளையும் பற்றி தெரிந்து கொள்வோமா? லட்சுமி கடாட்சத்தை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க, மகாலட்சுமிக்கு உகந்த சங்கினால் செய்யப்பட்ட ‘சங்கு மாலை’ கிடைத்தால் மிகவும் நல்லது.

சங்கு மாலையை மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு மாட்டினாலும் சரிதான் அல்லது உங்களுடைய வீட்டில் மகாலட்சுமியின் சிலை இருந்தால் அவளுடைய கழுத்தில் போட்டுவிட்டு, மகாலட்சுமியின் பாதங்களில் வெள்ளியினால் செய்யப்பட்ட தாமரைப்பூவை வைத்தாலே போதும். மகாலட்சுமி நம் வசம் அவள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

sangu-malai

எல்லோராலும் வெள்ளியினால் செய்யப்பட்ட தாமரையை வாங்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கலாம். இருப்பினும் வெள்ளிப் பொருட்களை வாங்குவதன் மூலம் நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் மேலும் மேலும் அதிகரிக்கும். எடை குறைந்த சிறிய அளவில் வெள்ளித் தாமரை இருந்தாலே போதும். அதை ஒருமுறை வாங்கி வைத்து விட்டால், நிச்சயமாக உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் குறைவதை கண் கூடாகக் காணலாம். இதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் மூலம் உங்களுடைய வாழ்க்கைத் தரம் மாறுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.