ஒருவருடைய வாழ்க்கையின் தடைகள் என்பது ஏற்படத்தான் செய்யும். அந்த தடைகளால் பிரச்சனைகளும் உண்டாகும். தடைகள் இல்லாத வாழ்க்கை என்பது யாருக்குமே கிடையாது. அந்த தடைகளையும் தாண்டி வெற்றிகளை பெறுபவர்கள் தான் சாதனையாளராக திகழ்கிறார்கள். அப்படி வெற்றிகளை பெற்று சாதனையாளராக திகழ்வதற்கு நம்முடைய விடாமுயற்சி எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தெய்வத்தின் மீது நமக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வ நம்பிக்கையுடன் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய காரியமாக இருந்தாலும் அதில் பல மடங்கு நன்மை உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகளும் கஷ்டங்களும் நீங்குவதற்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
அனைத்து பிரச்சினைகளும் தீர
பொதுவாகவே ஒரு வீட்டில் தடைகள் ஏற்பட்ட உடனே அது எதனால் ஏற்பட்டது அதை எப்படி சரி செய்வது என்பதை ஆராய்ந்து திரும்பவும் முயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் அந்த தடைகள் நீங்கவில்லை என்னும் பட்சத்தில் தான் நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
அப்படி எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் அந்த முயற்சிகளால் எந்த பலனும் இல்லாமல் தடைப்பட்ட காரியங்கள் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றாலோ பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றாலோ நாம் எந்த முறையில் தீபம் ஏற்று வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
இந்த தீபத்தை சனிக்கிழமை அன்று தான் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு நாம் திரி தயார் செய்வது மட்டும் தான் நேரம் எடுத்துக் கொள்ளும். சனிக்கிழமை அன்று ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் பெருங்காயத்தூளை போட்டு நன்றாக கரைத்து கொள்ளுங்கள். பெருங்காய வாசனை நன்றாக வரும் அளவிற்கு தூள் போட வேண்டும். இப்பொழுது பெருங்காயம் கரைந்த அந்த தண்ணீரில் பஞ்சு திரியை போட்டு ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த திரியை எடுத்து காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்ற போகிறோம். முதலில் மண் அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்ய அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பெருங்காயத் திரியை போட்டு நம் வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி நாம் தொடர்ச்சியாக ஒன்பது சனிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடைகளாக இருந்தாலும் அந்த தடைகள் நீங்கும். எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். மகாலட்சுமி தாயாரின் கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரித்து கடன் பிரச்சினை தீர பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து ஏற்றி வழிபட நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.