மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் நுழையவும், தரித்திரம் வீட்டைவிட்டு வெளியேறவும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்

mahalashmi2
- Advertisement -

ஒரு சில குடும்பங்களில் எப்பொழுதும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். மன நிம்மதி இல்லாமல் குழப்ப நிலையே நிலவிக் கொண்டிருக்கும். எவ்வளவு யோசித்தாலும் இந்த சூழ்நிலைக்கு காரணம் என்னவென்று புரியாமல் குழம்பி கொண்டிருப்பார்கள். என்னதான் கடினமாக உழைத்தாலும் கஷ்டங்கள் தீரவில்லையே என்று புலம்பி கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகளால் உங்கள் வீட்டில் மூதேவி குடி கொள்வதேயாகும். இந்த சூழ்நிலை மாறவேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தரித்திரம் நீங்கி மகாலட்சுமி தாயார் உங்கள் வீட்டில் நுழைய வேண்டும்.

mahalakshmi

தரித்திரம் வீட்டில் நுழையாமல் இருக்க செய்யக்கூடாத செயல்கள்:
மகாலட்சுமி தாயார் எப்பொழுதுமே வீட்டின் முன் வாசல் வழியாகத்தான் உள் நுழைவார்கள். எனவே எப்போதும் வீட்டின் முன் வாசலை சுத்தமாக பெருக்கி கோலமிட்டு அழகாக வைத்திருக்க வேண்டும். சில வீடுகளில் காலில் அணியும் செருப்பினை வாசலிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாய் கழற்றிவிட்டு இருப்பார்கள் இவ்வாறு செய்வதால் வீட்டில் தரித்திர நிலை உண்டாகும். அதனால் செருப்பினை செருப்பு வைக்கும் ஸ்டாண்டின் மீதோ அல்லது ஓரமாகவோ வைக்க வேண்டும்.

- Advertisement -

வாசல் மற்றும் வீடு பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் துடைப்பத்தினை மற்றவர்கள் கண்ணில் படாமல் ஓரமாக வைக்க வேண்டும். வெளிப்புறம் சுவற்றின் மீது சாய்த்து வைப்பதோ அல்லது தலைகீழாக நிறுத்தி வைப்பதோ கூடாது. அதுமட்டுமல்லாமல் பெருக்கும் பொழுது காலில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை துடைப்பத்தின் மீது தேய்த்துவிட கூடாது. இவ்வாறு செய்வதும் தரித்திரம் நிறைந்த செயலாகும்.

broom-thudaippam1

வீட்டினுள் அழுக்கு துணிகளை ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் படி போட்டு வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் துர்நாற்றம் வீடு முழுவதும் பரவி மூதேவி வீட்டிற்குள் வந்துவிடுவாள். அதுமட்டுமல்லாமல் ஈர துணிகளை வீட்டின் வாசல் கதவில் போடுவது என்பதும் ஒரு தரித்திரம் நிறைந்த செயலாகும்.

- Advertisement -

துணிகளை காலை வேளையிலேயே துவைத்துவிட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் அதை நிச்சயம் செய்யக்கூடாது . வீட்டிற்குள் காயவைக்கும் ஈர துணிகளை மற்றவர்கள் தலையில் படாமல் சற்று உயரமாகவோ அல்லது ஓரமாகவோ காய வைக்க வேண்டும்.

வீட்டை தூய்மையாக வைத்திருக்கும் சிலர் தமது உடலை சுத்தம் செய்யும் கழிவறையை சுத்தம் செய்வதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தால் அங்கிருந்து வரும் துர்நாற்றத்தின் மூலம் மூதேவி உடனே உன் நுழைந்துவிடுவாள்.

- Advertisement -

toilet-cleaning1

அடுத்ததாக சமைக்கும் சமையல் அறையை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எல்லா வேலைகளும் முடிந்தபின்னர் இரவில் தூங்கும் முன்னதாக சமையலறையை சுத்தமாக வைத்துவிட்டு பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும். ஏன் என்றால் இரவு நேரங்களில் மகாலட்சுமி தாயார் வீட்டின் சமையல் அறையை தான் முதலில் வலம் வருவாள்.

அடுத்ததாக பூஜை அறையை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி, தூபம் போட்டு எப்பொழுதும் நறுமணத்துடன் வைத்திருக்க வேண்டும். விளக்கேற்றும் திரிகளில் கருப்பு கறை படிந்திருந்தால் அவற்றை உடனே மாற்றிவிட வேண்டும்.

poojai

எவ்வாறு வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமோ அதுபோல நாமும் தூய்மையாக இருக்க வேண்டும். வியர்வை நாற்றத்துடன் இருப்பதும் ஒரு தரிதிரம் நிறைந்த செயலாகும். எப்பொழுதும் காலையிலேயே குளித்து விடுவது என்பது ஒரு சிறந்த செயலாகும்.

வீட்டிலுள்ள பெண்கள் எப்பொழுதும் தலைவிரி கோலத்துடன் இருத்தல் கூடாது. தலைக்கு குளித்து முடித்துவிட்டு ஈரத்துணியை கழட்டாமல் அப்படியே பூஜை அறையில் விளக்கேற்றுதல் என்பதும் கூடாது. ஆண், பெண் யாராக இருந்தாலும் பொய் பேசுதல், புறம்பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்ற தீய குணங்களை கொண்டிருத்தல் என்பதும் கூடாது. அதுவும் நம்மிடம் தரித்திரத்தை கொண்டுவந்து சேர்த்து விடும்.

kolam2

வீட்டின் பின் வாசல் வழியாக தான் மூதேவி உள்நுழைவாள். எனவே பின்வாசலில் தேவை இல்லாத பொருட்களை போட்டு வைப்பது, அசுத்தமாக வைத்திருப்பது என்பது கூடாது. எவ்வாறு முன் வாசலில் கோலம் போட்டு வைக்கிறோமோ அதேபோல் பின் வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டு வைத்திருக்க வேண்டும். கோலம் இருக்கும் இடத்தில் மூதேவி உள் நுழையவே மாட்டாள்.

இவ்வாறான தரித்திர செயல்களை செய்யாமல் வீட்டினை தூய்மையாகவும், உங்கள் மனதினில் எந்தவித தீய எண்ணங்கள் இல்லாமலும் இருந்தால் மகாலட்சுமி தாயார் உங்கள் வீட்டில் எப்போதும் குடி கொண்டு உங்களுக்கான தேவைகளை செய்து கொடுப்பாள்.

- Advertisement -