பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய கஷ்டம் இந்த பணக்கஷ்டம். பணக்கஷ்டத்திலிருந்து ஒரு சில வாரங்களிலேயே விடுபட்டு, ஒரு சில வாரங்களிலேயே செல்வ செழிப்பில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பவர்கள், இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்யும் போது ஒவ்வொரு வாரத்திற்கும் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தில் வித்தியாசத்தை கண்கூடாக காண முடியும். அந்த மகாலட்சுமி வழிபாட்டை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது? ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்ய வேண்டும். இது வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய மாலை நேர சுக்கிர ஹோரை. இந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்தால் தான் முழு பலனை பெற முடியும். வழக்கம்போல பூஜை அறையை தயார் செய்து கொள்ளவும். காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்கவும்.
மகாலட்சுமிக்கு வெள்ளை நிற நெய்வேதியம் வைக்க வேண்டும். பால் பாயாசம், நாட்டு சர்க்கரை சேர்த்த தேங்காய் பால், கற்கண்டு சாதம் இப்படி ஏதாவது ஒன்றை நெய்வேத்தியம் செய்யலாம். ஒரு வெள்ளி கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன் பிரசாதமாக வைக்கவும். வழிபாட்டை தொடங்குங்கள். இந்த வழிபாட்டில் மிக மிக முக்கியமாக படிக்க வேண்டிய பாடல் மகாலட்சுமி அஷ்டகம்.
இதை உங்களுடைய வாயால் படிப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. சமஸ்கிருதத்தில் இருந்தாலும் இரண்டு முறை இந்த பாடலை காதில் கேட்டுக்கொண்டே, இந்த பாடலை படித்தால் சுலபமாக உச்சரிக்க முடியும். அஷ்ட லட்சுமிகளுக்கு உண்டான 8 பாடல்களைக் கொண்டது. அகத்திய மகரிஷியால் வழங்கப்பட்ட மகாலட்சுமி அஷ்டகத்திற்கு அத்தனை சக்தி இருக்கிறது.
இந்திரன் தன் அகந்தையால் தன்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்து நின்ற போது, இந்த பாடலை படித்ததன் மூலமாகத்தான் இந்திரனுக்கு இழந்த செல்வங்கள் எல்லாம் மீண்டும் கிடைக்கப்பெற்றது என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். நாமும் நம்பி இந்த மகாலட்சுமி அஷ்டகத்தைப் படிப்போம். மகாலட்சுமியை வணங்கி வழிபாடு செய்வோம். நமக்கும் செல்வ வளம் பெருகும்.
மகாலட்சுமி அஷ்டகம்
1. நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
2.நமஸ்தே கருடா ரூடே கோலாசுற பயங்கரி
சர்வபாபா ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
3.சர்வக்னே சர்வவரதே சர்வதுஷ்ட பயங்கரி
சர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
4.சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
5.ஆத்யந்த ரஹீதே தேவி ஆத்யஷக்தி மஹேஸ்வரி
யோகக்னே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
6.ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரௌத்ரேய் மஹாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
7.பத்மாசனஸ் ஸ்திதே தேவி பர ப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேஷி ஜகன்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
8.ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன் மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.
9.மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம் யஹ் படே பக்தி மான் நரஹ:
சர்வசித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா.
10.ஏக காலம் படேன் நித்யம் மஹா பாப விநாசனம்
த்விகாலம் யஹ் படேன் நித்யம் தன தான்யா சமன்விதஹ:
11.திரிகாலம் யஹ் படேன் நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹா லக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்ன வரதா சுபா
இதில் முதல் எட்டு பாடல்களில் இறுதியாக நமோஸ்துதே என்று முடியும் அல்லவா. ஒவ்வொரு நமோஸ்துதே வரும் போதும் மகாலட்சுமியை கீழே விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்த்துக் கொள்ளுங்கள். நீயே கதி என்று சொல்லி இந்த பாடலை படிக்க வேண்டும். மகாலட்சுமி நிச்சயம் உங்களுக்கான செல்வ வளங்களை வாரி வழங்குவார். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் கிடைக்க பிள்ளையார் மந்திரம்
பூஜையை முடித்துவிட்டு பூஜை அறையில் வைத்த பிரசாதங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். நீங்களும் இந்திரனுக்கு இணையான செல்வ வளத்தை பெற முடியும்.