1 ரூபாய் நாணயம் போதும். உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் கையால் பொன் மழை பொழிவது உறுதி.

1-rupee
- Advertisement -

நிறைய காலண்டரில் நாம் பார்த்திருப்போம். மகாலட்சுமி தாயாரின் கையிலிருந்து பொன்மழை பொழியும். தங்க நாணயங்கள் கொட்டும். இப்படியாக மகாலட்சுமி தாயார் ஆசீர்வாதத்தை உண்மையிலேயே நாம் பெற வேண்டும் என்றால், அவர்களுடைய கையால் நிஜத்திலேயே நம்முடைய வீட்டில் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டும் என்றால், பொன் மழை நம்முடைய வீட்டிலும் பொழிய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் காணும் கனவை நிஜத்தில் நினைவாக்க வேண்டுமென்றால், முதலில் விடாமுயற்சியும் கடின உழைப்பும் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டும். விடாமுயற்சியோடும் கடின உழைப்புடன் இந்த பரிகாரம் சேரும்போது உங்களுக்குப் பலன் பல மடங்கு கிடைக்கும்.

red-cloth

இந்த பூஜை செய்வதற்கு கட்டாயம் இந்த பொருட்கள் தேவை. சிவப்பு நிறத்தில் சதுர வடிவில் இருக்கும் காட்டன் துணி 3. ஒரு ரூபாய் நாணயம் 3. காய்ச்சாத பசும்பால் 1/4 கப். பூஜையறையை சுத்தம் செய்து மகாலட்சுமிக்கு வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கட்டாயமாக மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். வாசனை மிகுந்த தூபங்களை ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். முதலில் சிவப்பு நிறத்தில் இருக்கும் காட்டன் துணியை பசும்பாலில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ள வேண்டும். துணியில் லேசாக பசும்பாலில் ஈரம் இருக்கலாம். பசும் பாலில் நனைத்த 3 துணியிலும் ஒவ்வொரு ரூபாய் நாணயங்களை வைத்து தனித்தனி முடிச்சாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். மூன்று முடிச்சு நமக்கு கிடைக்கும். பிறகு இந்த மூன்று முடிச்சையும் சேர்த்து, துணியின் முனையில் ஒரு நூல் போட்டு ஒரே முடிச்சாக கட்டி விடவேண்டும். (புரிகிறதா, 3 ஒரு ரூபாய் நாணயங்களும் வட்ட வடிவில் முடிச்சுப் போட்டது அப்படியே வெளியே தெரிய வேண்டும். மூன்று முடிச்சுகள் முனையை மட்டும் ஒன்றாக சேர்த்து நூல் போட்டு கட்டினால் போதும்.)

one rupee

இந்த முடிச்சை மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி தேவியிடம் ‘உங்களுடைய ஆசீர்வாதத்தால், உங்கள் பொற்கரங்களால் எங்களுடைய வீட்டில் செல்வம் மழை பொழிய அருளாசி வழங்க வேண்டும் என்று’ மனதார பிரார்த்தனை செய்து கொண்டு இந்த முடிச்சை கொண்டுபோய் நில வாசலின் வெளிப்பக்கத்தில் மாட்டி விட வேண்டும். நிலை வாசலுக்கு நேராக நடுவில் தான் மாட்ட வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நிலை வாசலுக்கு பக்கவாட்டில் ஜன்னல் இருந்தால் கூட அதில் இந்த முடிச்சை கட்டி தொங்க விட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை இந்த முடிச்சை அவிழ்த்து துணிகளை துவைத்து மீண்டும் மேலே சொன்னபடி பரிகாரத்தை செய்து, நாணயங்களை முடிந்து,  நிலை வாசலில் வைத்தால் போதும். பழைய மூன்று ஒரு ரூபாய் நாணயங்களை மீண்டும் பூஜைக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

மகாலட்சுமியை வீட்டில் வசியம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பூஜையை அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் மிகப்பெரிய அளவில் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப நாம் சுலபமாக இந்த பூஜையை மேல் சொன்ன முறைகளில் செய்தாலே போதும். எதிர்பாராத நல்ல மாற்றங்கள் வீட்டில் தெரியும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -