பொதுவாக மஹாளய அமாவாசை அன்று முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அன்றைய தினம் முன்னோர்களுக்கு உரிய தினம் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தினத்தில் மற்ற வழிபாடுகளை செய்வது என்பது அந்த அளவிற்கு பிரசித்தியாக இல்லை. ஆனால் கண்டிப்பாக முறையில் மற்ற தெய்வ வழிபாட்டையும் நாம் அன்றைய தினம் மேற்கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மஹாளய அமாவாசை அன்று செய்ய வேண்டிய வழிபாடு
பொதுவாக மஹாளய அமாவாசை தினத்தன்று காலையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகளை செய்வோம். ஒரு சிலர் வீட்டிற்கு ஐயரை அழைத்து வந்து திதி கொடுப்பார்கள். இன்னும் சிலரோ ஆலயத்திற்கு சென்று அங்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வருவார்கள். எப்படி செய்வதாக இருந்தாலும் அன்று ஐயருக்கு தானம் தர வேண்டும். அது ஒருவர் சமைத்து சாப்பிடும் அளவிற்கு இருக்க வேண்டும்.
அதில் குறிப்பாக இடம்பெற வேண்டிய பொருட்கள் அகத்திக்கீரை, வாழைக்காய், கருணைக்கிழங்கு, (கருணைக் கிழங்கை நறுக்கி தரக்கூடாது முழுமையாக தான் தர வேண்டும்) சேனைக்கிழங்கு, இஞ்சி, அரிசி, பயத்தம் பருப்பு, நெய், பால், தயிர், கடுகு, சீரகம், மிளகாய், புளி, சாப்பிடுவதற்கு ஒரு வாழை இலை இவை அனைத்தையும் கண்டிப்பான முறையில் தர வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதாக இருக்கும் பட்சத்தில் காலை 11:30 மணியிலிருந்து 12 20 மணிக்குள் செய்யலாம். அதே போல் மதியம் 1:08 மணியிலிருந்து 3:00 வரை செய்யலாம். இந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாது என்பவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தால் அதற்கு பலன் என்னும் அதிகமாகவே இருக்கும்.
அன்றைய தினத்தில் நாம் கண்டிப்பான முறையில் அரச மரத்தடிக்கு சென்று அங்கு ஒரு அகல் விளக்கை வைத்து அதில் எட்டு திரிகளை போட்டு கடுகு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக கிடைக்கச் செய்யும். அதேபோல் 24 மணி நேரமும் வீட்டு பூஜை அறையில் உப்பு தீபம் எரியும் படி பார்த்துக் கொண்டோம் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்.
இதே போல் மாலை நேரத்தில் மகாலட்சுமி தாயார் வழிபாடுகளை செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாரின் படத்தை எடுத்து வைத்து வாசனை நிறைந்த மலர்களால் மகாலட்சுமி தாயாரின் பாடல்களை கூறி அர்ச்சனை செய்யலாம். அதே போல் குங்குமத்திலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து தேனுடன் கலந்து நம்முடைய வீட்டு நிலை வாசலில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். அடுத்ததாக வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். அப்படி சாம்பிராணி தூபம் போடும் போது அதில் கண்டிப்பாக முறையில் வெண்கடுகையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்த வழிபாடுகளை அமாவாசை தினத்தன்று செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதமும் மகாலட்சுமி தாயாரின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கப்பெறும். மேலும் நம்முடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இதையும் படிக்கலாமே:மஹாளய அமாவாசை அன்று வாராகி அம்மனை வழிபடும் முறை
முன்னோர்களுக்கு வழிபாடு செய்தால் போதும் என்பவர்கள் இந்த பதிவில் இருக்கும் வழிப்பாட்டு முறைகளையும் பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.