கல் உப்பை வைத்து இன்று இரண்டு வகையான பரிகாரங்களை செய்யப் போகின்றோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பரிகாரம் செய்ய தேவைப்படக்கூடிய பொருள் ஒன்றுதான். கல் உப்பு. ஆனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன் இரண்டு. அதிலும் அமாவாசை தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வது, ஆயிரம் மடங்கு நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.
அதிலும் புரட்டாசி அமாவாசைக்கு சக்தி அதிகம். ஆகவே இந்த நாளை யாரும் தவற விடாதீங்க. இன்று இரவு தூங்க செல்லும் போது இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள். அடுத்த மூன்று நாளில், மூன்று தலைமுறை பிரச்சனையை கூட சரி செய்து விடலாம்.
பணம் தரும் கல் உப்பு பரிகாரம்
முதலில் பணம் தரும் கல் உப்பு பரிகாரத்தை பார்க்க போகின்றோம். மகாலட்சுமி, பாற்கடலில் தோன்றியவள் என்பது நம்முடைய இந்து மதத்தில் இருக்கக்கூடிய அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த பாற்கடலில் தான் கல் உப்பு எடுக்கப்படுகிறது. ஆகவே, அந்த கல்லுப்பை நாம் மகாலட்சுமியின் அம்சமாகத்தான் பார்க்கின்றோம்.
உங்களுடைய வீட்டில் சமையல் அறையில் கண்ணாடி குடுவை, பீங்கான் ஜாடி, பிளாஸ்டிக் டப்பா, எதில் கல் உப்பு இருந்தாலும் சரி, கவலை கிடையாது. இன்று ஒரு மண் பானை வாங்கிக் கொள்ளுங்கள். சிறிய அளவில் மண்ணால் செய்யப்பட்ட பானைகள், அழகு அழகாக இப்போது கடைகளில் விற்கிறது. அந்தப் பானையை வாங்கி அதில் கொஞ்சம் கல்லுப்பை கொட்டி நிறப்பி சமையல் அறையில் வைத்து புழங்க துவங்கிப் பாருங்கள்.
உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் தாண்டவமாட துவங்கிவிடும். உங்களுடைய பணம் வெளியில் எந்த இடத்தில் எல்லாம் தேங்கி நிற்கிறதோ அந்த தேக்கம் எல்லாம் நீக்கப்பட்டு, வீட்டிற்குள் பணம் வர துவங்கும். வீட்டில் வருமானம் பெருகும். ஐஸ்வரியம் பெருகும். இந்த ஒரு வேலையை மட்டும் சிரமம் பார்க்காமல் இன்று செய்து விடுங்கள்.
இந்த வேலையை அமாவாசை நாளில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். முன்னோர்களையும் குல தெய்வத்தையும் நினைத்து இன்று மண் பானையில் உப்பை கொட்டி வையுங்கள். பின்பு நடக்கும் மாற்றத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
கெட்ட சக்தி விலக கல் உப்பு பரிகாரம்
இரண்டாவது பரிகாரம் வீட்டில் ஏதேனும் கெட்ட சக்தி தங்கி இருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் நிம்மதி இருக்காது. சந்தோஷம் இருக்காது. ஐஸ்வரியம் தங்காது. லட்சுமி கடாட்சம் நிலைக்காது. உங்கள் வீட்டில் இருக்கும் கெட்டதை வெளியில் துரத்தி அடிக்க வேண்டும். என்ன செய்வது. அமாவாசை இரவு ஒரு பாத்திரம் நிரம்ப சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் தாராளமாக இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு, நன்றாக கரைத்து விடுங்கள். இந்த உப்பு தண்ணீர் பாத்திரத்தை வீட்டின் மத்திய பகுதியில் வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் நடு புள்ளி எங்கே இருக்கிறது? உங்க வீட்டின் நடுப்பகுதியை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் இந்த சொம்பை வைத்து விடுங்கள். மூன்று நாள் இரவு அந்த கல்லுப்பு தண்ணீர் அதே இடத்தில் இருக்கட்டும்.
அதை எடுத்து வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் கொஞ்சம் உயரமான ஸ்டூல் போட்டு அதன் மேலே இந்த கல்லுப்பு தண்ணீரை வைக்கலாம். ஆனால் வீட்டின் மத்திய பகுதியில் தான் இதை வைக்க வேண்டும். மூன்று நாள் கழித்து அந்த கல்உப்பு தண்ணீரை எடுத்து வீட்டிற்கு வெளியே கொஞ்சம் தூரம் கொண்டு போய் கொட்டி விட வேண்டும்.
உங்கள் வீட்டில் இருக்கும் நெகடிவ் எனர்ஜியை எல்லாம் அந்த கல்லுப்பு தண்ணீர் தன்னகத்தை இழுத்து வைத்திருக்கும். உங்களுடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் மூன்று நாள் இரவில் அந்த கல்லுப்பு தண்ணீர் கருப்பாக மாறி இருக்கும். அதை வைத்து நீங்கள் கண்டுபிடித்து விடலாம். உங்கள் வீட்டில் இருந்த கெட்ட சக்தி விலகியது என்று.
இதையும் படிக்கலாமே: மகாளய அமாவாசையில் பெண்கள் செய்யக்கூடாத தவறு
தண்ணீர் வெள்ளையாகவே இருந்தாலும் பிரச்சனை கிடையாது. உங்கள் வீட்டில் அதீத எதிர்மறை ஆற்றல் இல்லை என்பதை குறிக்கிறது. எப்படி இருந்தாலும் சரி, அந்த கல்லுப்பு தண்ணீரை கொண்டு போய் நீங்கள் வீட்டிற்கு வெளியில் தான் ஊற்ற வேண்டும். வீட்டிற்குள் ஊற்றக்கூடாது. இந்த ஆன்மீகம் சார்ந்த அரிய பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.