மஹாளய அமாவாசை தினத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

mahalayam
- Advertisement -

நம்மை இந்த உலகத்திற்கு தந்து, மறைந்து போன நமது தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்ற முன்னோர்களை நாம் எப்போதும் நமது மனதில் இருத்தி வழிபடுவது மிகவும் நன்றிக்குரிய செயலாகும். அந்த பித்ருக்களை வழிபடுவதற்கென்று ஆண்டில் சில விஷேஷ தினங்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் “மஹாளய அமாவாசை” தினம். இந்த மஹாளய அமாவாசை தினத்தில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவது குறித்தும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் இங்கு தேர்ந்து கொள்ளலாம்.

mahalaya-ammavasai

மஹாளய அமாவாசை தினமான அதிகாலையிலேயே குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் குளம், ஆறு, கடல் ஆகியவற்றின் கரைகளில் வேதியர்களை கொண்டு முறைப்படி பித்ருக்களுக்கு அமாவாசை சிராத்தம் கொடுக்க வேண்டும். சிராத்தம் சடங்கு செய்து முடித்ததும், அச்சடங்கை முறைப்படி செய்ய உதவிய வேதம் அறிந்த அந்தணர்களுக்கு அரிசி, காய்கறிகள் போன்றவற்றை தானமளித்து அவர்களுக்குண்டான தட்சிணையையும் அளிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தினத்தில் நமது வீட்டு பூஜையறையை நன்கு சுத்தம் செய்த பின்பு, ஒரு பீடத்தில் புது வேட்டி, புடவையை வைத்து இரண்டு பஞ்சமுக குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி ஒரு வாழை இலையில் மறைந்த நமது முன்னோர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பதார்த்தங்கள் படையலாக வைத்து வழிபட வேண்டும். தேவலோகம் மற்றும் பித்ருலோகம் கணக்குபடி பூமியின் 6 மாத தட்சிணாயன காலம் என்பது அவர்களின் லோகத்தில் ஒரு நாளின் இரவு வேளையாகும்.

pitru worship

மஹாளய அமாவாசை அன்று நாம் கொடுக்கும் சிராத்தம் ஆனது பித்ரு லோகத்தில் வசிக்கும் நமது மறைந்த முன்னோர்களுக்கு வெளிச்சத்தை தருகின்றது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடையும் அனைவரின் ஆன்மாவும் நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம். இத்தினத்தில் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவு தவிர்த்து, விரதமிருந்து மறைந்த முன்னோர்களை வழிபட வேண்டும் வழிபாடு முடிந்ததும் பித்ருக்களின் உருவமாக கருதப்படும் காகங்களுக்கு படையல்களில் சிறிதளவை உணவாக வைக்க வேண்டும். இதன் பிறகே குடும்பத்தில் உள்ள அனைவரும் உணவு அருந்த வேண்டும். இத்தகைய விரதத்தை நாம் மேற்கொள்வதால் நமக்கு “பித்ரு தோஷம்” எனப்படும் முன்னோர்களின் சாபத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும். திருமண தடை அல்லது தாமதம், புத்திர பாக்கியமின்மை, தொழில் – வியாபார மந்த நிலை, கடன் பிரச்சனைகள் போன்ற அனைத்தும் தீருவதற்கான வழிபிறக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
விளம்பி ஆண்டு மழைப்பொழிவு குறித்து பஞ்சாங்கம் கூறுவது என்ன

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mahalaya amavasya vratham in Tamil. Mahalaya amavasya tharpanam is considered as very important tharpanam. For that we described the viratham procedure.

- Advertisement -