விநாயகப் பெருமான் அவதரித்த மாதமான ஆவணி மாதத்தன்று வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அந்த மகா சங்கடஹர சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய கிழமையாகவும் கருதப்படுகிறது. குரு பகவானுக்குரிய கிழமையில் வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி என்பது ஒரு பக்கம் இருக்க அன்றைய தினம் வாஸ்து நாளும் என்பதால் வாஸ்து பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும்.
இப்படி இவர்கள் மூவரின் அருளையும் பெறுவதற்குரிய அரிய நாளாக அன்றைய தினம் திகழ்கிறது. இந்த நிகழ்வு 18 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பான இந்த நாளில் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகா சங்கடஹர சதுர்த்தி வழிபடும் முறை
சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. இதில் வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு திதிகள் வரும். தேய்பிறை சதுர்த்தியை தான் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். நிலவு எப்படி தேய்ந்து கொண்டே செல்கிறதோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்களும் தேய்ந்து கொண்டே செல்லும் என்பதால்தான் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தியை சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி என்று கூறுகிறோம்.
அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமான் தோன்றிய ஆவணி மாதத்தில் வரும் பொழுது அதை மகா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மகா சங்கடஹர சதுர்த்தி வருடத்திற்கு ஒருமுறை வருகிறது. அந்த நாளில் நாம் தவறாமல் விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் அந்த வருடம் முழுவதும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டதற்கு சமமாக கருதப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த நாளில் குரு பகவானையும், வாஸ்து பகவானையும் வழிபடும் போது நம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.
அன்றைய தினம் விடியற்காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி விநாயகப் பெருமானை மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் முழுவதும் “ஓம் கம் கணபதியே நமக” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் தங்களுடன் ஒரு அருகம்புல்லை வைத்துக்கொள்ள வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் தான் சங்கடஹர சதுர்த்தி பூஜை என்பது நடைபெறும்.
அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் தண்ணீர் தெளித்து பச்சை கற்பூரத்தை தூவி விட்டு அதற்கு மேல் ஒரு தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேல் கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை வைத்து அதற்கு மேல் ஒரு நாணயத்தை வைத்து அதற்கு மேலாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பிள்ளையாருக்கு குங்குமத்தை வைத்து விட்டு அவருக்கு அருகிலேயே ஒரு அருகம்புல்லை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இவருக்கு பொரி உருண்டை வைக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் குரு பகவானுக்குரிய கிழமை என்பதால் கருப்பு சுண்டலை வைக்க வேண்டும். இதோடு அவள் மற்றும் வெல்லம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அருகம்புல், உதிரி பூக்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் “ஓம் சௌம் சௌமியாய கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூறிய அருகம்புல் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். அடுத்ததாக “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். இதனால் மனம் ஒரு நிலைப்படும்.
அடுத்ததாக கட்டை விரலை மடக்கிக்கொண்டு கைகளை மூடி தலையில் ஐந்து முறை கொட்டிக் கொள்ள வேண்டும். கன்னத்தில் ஐந்து முறை தப்பு போட வேண்டும். பிறகு ஒரு தேங்காயை எடுத்து உடைத்து அது அந்த தேங்காயில் தீபம் ஏற்றி விநாயகப் பெருமானுக்கு ஆராத்தி காட்டி வைக்க வேண்டும். அடுத்ததாக அந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் குரு குரு நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை நீங்கள் யாரை குருவாக நினைத்திருக்கிறீர்களோ அவர்களை நினைத்து கூற வேண்டும். இது குரு பகவானுக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது.
வாஸ்து பகவானுக்குரிய வழிப்பாடாக புதிதாக ஒரு செங்கல் வாங்கி அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து “ஓம் வாஸ்து பகவானே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு விநாயகப் பெருமானின் அகவலை மனதார உச்சரிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:11 நாளில் கோரிக்கை நிறைவேற
இப்படி விநாயகப் பெருமானையும், குரு பகவானையும், வாஸ்து பகவானையும் வழிபாடு செய்யும்பொழுது இவர்கள் மூவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் செல்வ செழிப்பு மேலோங்கும். குரு பகவானின் அருளால் அருளால் நன்மைகள் உண்டாகும். வாஸ்து பகவானின் அருளால் சொந்த வீடு வாங்கும் சூழ்நிலையும் புதிது உண்டாகும்.