விநாயகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமாக திகழக்கூடிய ஒரு திதி என்றால் அது சதுர்த்தி திரி தான். அதிலும் குறிப்பாக ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். அன்றைய தினம் முடிந்த அளவிற்கு விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது என்பது சிறப்பு. அப்படி வழிபாடு செய்யும்பொழுது எந்த முறையில் நம்முடைய கோரிக்கையை விநாயகப் பெருமானிடம் வைத்தால் அவர் விரைவிலேயே அதை நிறைவேற்றுவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு தெய்வ வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அப்பொழுதுதான் அந்த தெய்வ வழிபாட்டையே எந்தவித தடையும் இல்லாமல் நம்மால் மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. தெய்வ வழிபாட்டிற்கே முதலில் விநாயகரை தான் வழிபட வேண்டும் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு காரியத்திலும் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கு கண்டிப்பான முறையில் நாம் விநாயகர் பெருமானை வழிபட வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்குரிய மிகவும் விசேஷகரமான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சுமமான வழிபாட்டு முறையை பற்றி தான் தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று மாலை 6:15க்கு மேல் செய்ய வேண்டும். ஏனென்றால் அப்பொழுது தான் சதுர்த்தி திதி ஆரம்பம் ஆகிறது. தேய்பிறை சதுர்த்தி என்பதால் மாலை நேரத்தில்தான் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் நம்முடைய வீட்டில் விநாயகரின் சிலை இருக்கும் பட்சத்தில் நம்மால் முடிந்த அளவிற்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், தேன் போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
கண்டிப்பான முறையில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்லை வைக்க வேண்டும். இதோடு எருக்கம் பூ கிடைத்தால் அந்த பூவையும் வைக்கலாம், செம்பருத்தி பூ வைக்கலாம், அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பூக்களையும் வைத்து விநாயகப் பெருமானை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அன்று வியாழக்கிழமை என்பதால் சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யலாம்.
இப்படி செய்த பிறகு கண்டிப்பான முறையில் அன்றைய தினம் விநாயகப் பெருமானுக்கு உரிய விநாயகர் அகவலை முழு மனதோடு பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்து முடித்த பிறகு கையில் ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு லட்சுமி கணபதி மந்திரத்தை கூற வேண்டும். அப்படி கூறி முடித்த பிறகு நம்முடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை விநாயகப் பெருமானிடம் கூறிவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அப்படியே விநாயகரின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.
நாம் வைத்த கோரிக்கை நிறைவேறியதும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலய உண்டியலில் சேர்த்து விட்டு விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.
லட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வர வரத சர்வ தனம்மே வசமானய ஸ்வாஹா
இந்த மந்திரத்தை 5, 7 என்ற எண்ணிக்கையில் குறைந்த கூற வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் தினமும் இந்த மந்திரத்தை கூறி வர லட்சுமி கணபதியின் அருளால் பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே சகல துன்பங்களை நீக்கும் ஆவணி தேய்பிறை பஞ்சமி
இந்த எளிமையான சூட்சுமமான பரிகாரத்தை விநாயகப் பெருமானின் மீது முழு நம்பிக்கை வைத்து அவரிடம் சரணாகதி அடைந்து செய்பவர்களுக்கு அவர்களின் கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும்.