தோசை மாவு இல்லையா? 15 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் மைதா ரவா தோசை சுவையாக எப்படி செய்வது?

maida-rava-dosa_tamil
- Advertisement -

அவசரத்திற்கு தோசை மாவு இல்லை என்கிற பொழுது இன்ஸ்டன்ட் ஆக இது போல மைதா ரவை சேர்த்து தோசை வார்த்தால் அருமையான சுவையில் தோசையை தயார் செய்து விடலாம். பரபரப்பான நேரங்களிலும் சீக்கிரம் செய்து விடக் கூடிய இந்த மைதா ரவை தோசை ரெசிபி செய்ய அதிக நேரமும் எடுக்க போவது கிடையாது. எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் மைதா ரவை தோசை எப்படி சுலபமாக தயார் செய்யப் போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

மைதா – இரண்டு கப், ரவை – 4 டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – இரண்டு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

மைதா ரவை தோசை சுடுவதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்சிங் பவுலில் இரண்டு கப் அளவிற்கு மைதா மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாலு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த அல்லது வறுக்காத ரவையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்துவிட்டுக் கொள்ளுங்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் எதுவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு மாவை கரைக்க வேண்டும்.

பின்பு அப்படியே 10 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். மாவு ஊறி வருவதற்குள் இதற்கு ஒரு சிறு தாளிப்பை தயார் செய்ய வேண்டும். எனவே அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுக்க வேண்டும்.

- Advertisement -

இவை சிவந்து வந்த பிறகு துருவிய இஞ்சி அல்லது பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் காரத்திற்கு ஏற்ப போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பெருங்காயத்தூள் தூவி கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் தோல் உரித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
ரோட்டுக்கடை ஸ்டைலில் காரசாரமான காரச் சட்னியின் சீக்ரெட் இது தான். இப்படி மட்டும் இந்த சட்னி அரைத்தீங்கன்னா குண்டா இட்லி சுட்டாலும் பத்தவே பத்தாது.\

வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வர வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். இப்பொழுது தாளிப்பு ரெடி! இதை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது தோசை மாவு ரெடி! இந்த மாவை நீங்கள் கொஞ்சம் நீர்க்க கரைத்து மெல்லியதாக வார்த்தால் மொறு மொறு என்று சூப்பராக மைதா ரவை தோசை ரெடி! நீங்களும் இதே போல ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -