என்ன தான் நம் வீட்டில் பலவகையான சட்னி ரெசிபிகளை செய்தாலும் கூட ஒரு சில சட்னிகள் ஹோட்டலில் கிடைப்பது போல் அதே சுவையில் வீட்டில் கிடைக்காது. அதே போலத் தான் இந்த ரோட்டு கடைகளில் கிடைக்கும் சட்னி சாம்பார் போன்றவையும். அதிலும் இந்த ரோட்டு கடைகளில் கிடைக்கும் காரச் சட்னிக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவிற்கு இதன் சுவை தூக்கலாக இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அந்த சூப்பர் சட்னி ரெசிபியை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 2, சின்ன வெங்காயம் -10, காய்ந்த மிளகாய் – 4, மிளகாய் தூள் -1 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், கடுகு -1/2 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து.
செய்முறை
இந்த சட்னி செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை மீடியம் சைஸில் அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் வெங்காயத்தையும் தோலுரித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அனால் சின்ன வெங்காயத்தை சேர்க்கும் போது தான் இதை சுவை தனியாக தெரியும்.
அடுத்து காய்ந்த மிளகாய், மிளகாய்த் தூள், உப்பு, அரை ஸ்பூன் சீரகம் என அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னியை ரொம்ப மைய அரைத்து விட்டாலும் சாப்பிட நன்றாக இருக்காது.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து அதுவும் பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்த சட்னியை இதில் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் வரை கலந்து விடுங்கள். இதில் நாம் சேர்த்திருக்கும் பொருட்களை எல்லாம் பச்சையாக அரைத்து இருப்பதால் இப்படி வதக்கும் போது சட்னியில் உள்ள பச்சை வாடை போய் விடும்.
இதையும் படிக்கலாமே: ருசியான ரவா பொங்கல் ரெசிபி! என்னது ரவையில் பொங்களான்னு யோசிக்கதிங்க, இப்படி செஞ்சி பாருங்க டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்.
ஐந்து நிமிடம் கொதித்தாலே போதும். சட்னி நல்ல கெட்டியாகி அதே சமயத்தில் காரசாரமான சுவையில் அட்டகாசமாக தயாராகி விடும். இந்த சட்னிக்கு சுட சுட இட்லி இருந்தால் போதும். நீங்க எத்தனை இட்லி சாப்டீங்க உங்களுக்கு தெரியாது அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். இது தோசை சப்பாத்தி போன்றவற்றின் கூட வைத்து சாப்பிட நன்றாகவே இருக்கும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.