ராஜ வாழ்க்கையை வாழ வேண்டுமா? இந்த 2 பொருட்களை சேர்த்து நீங்களே தாயத்து செய்து கொள்ளுங்கள்!

thayathu1

அந்த காலங்களில் சுகபோகமாக, அரண்மனையில் வாழ்ந்து, ஒரு நாட்டையே ஆண்டு, அனுபவித்து, தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தான் ராஜாக்கள். அப்படிப்பட்ட ராஜாக்கள் கூட தங்களை, தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காக கழுத்திலும், இடுப்பிலும், கைகளிலும் தாயத்துகளை கட்டி வைத்திருப்பார்கள். அப்போது தாயத்திற்கு ஒரு அதீத சக்தி உண்டு என்பதுதானே அர்த்தம். ஆனால் அந்த தாயத்துகளுக்கெல்லாம் அதிகப்படியான மந்திர தந்திர வித்தைகள் செய்து, பெரிய பெரிய சாஸ்திரங்கள் ஓதப்பட்டு, பெரிய பெரிய மகான்கள் மூலம் தயார் செய்ததாக இருக்கும். அவ்வளவு பெரிய சுகபோக வாழ்க்கை நமக்கு கிடைக்காவிட்டாலும், நம் தகுதிக்கு தகுந்தவாறு ஒரு சுகமான வாழ்க்கையை வாழ, நமக்கு நாமே ஒரு தாயத்தை செய்து கொள்ளலாமே.

thayathu

ராஜாக்களை போல நம்மால் வாழ முடியவில்லை என்றாலும், நமக்கு கிடைக்கக்கூடிய சுகபோக வாழ்க்கையாவது நமக்கு கிடைக்க வேண்டாமா? நாமும் எல்லா வகையான வளத்தையும் பெற்று, சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றால் இந்த இரண்டு பொருட்களை வைத்து நம் கையாலேயே ஒரு தாயத்தை தயாரித்துக் கொள்ளலாம். சாதாரணமான வாழ்க்கையை கூட, சுகபோக வாழ்க்கையாக மாற்றித் தரும், இந்த தாயத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா.

இதற்கு தர்ப்பைப்புல் ஒன்று, கொத்தமல்லித்தழை வேர், வெள்ளி தாயத்து இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும். தர்ப்பைப்புல் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதே அளவு கொத்தமல்லித்தழை வேர் சிறிதளவு வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இது இரண்டையும் ஒன்றாக வைத்து ஏதாவது ஒரு நூலினால் சுற்றி, சிறிதளவு மஞ்சளை தண்ணீரில் குழைத்து இந்த இரண்டு வேரின் மீதும் தடவி, வெள்ளி தாயத்தில் போட்டு மூடி ஒரு சிகப்பு கையிறிலோ அல்லது கருப்பு கயிறிலோ கட்டி, உங்கள் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம்.

dharpai-grass

இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்ள முடியாதவர்கள் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். கட்டாயமாக கைகளில் கட்டக்கூடாது. இது ஒரு சுலபமான முறை தான். இதை வெள்ளிக்கிழமை அன்று தயார்செய்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கொத்தமல்லி தழையின் வேருக்கு நல்ல ஆற்றலையும், நேர்மறை ஆற்றலையும் தன் வசியப்படுத்தி ஈர்த்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. தர்ப்பைப்புலானது உங்களிடம் எந்த ஒரு கெட்ட சக்தியையும் தீவினைகளையும் அண்டவிடாது.

- Advertisement -

thayathu

முறையாக தாயத்து செய்ய வேண்டுமென்றால் மூலிகைகளுக்கு காப்பு கட்டி, அதன் பின்பும் மூலிகைகளை எடுத்து, மந்திரங்கள் ஓதி தான் கட்டுவார்கள். ஆனால் எந்தவித மந்திர தந்திரமும் இல்லாமல் சுலபமாக நமக்கு நாமே செய்யக்கூடிய தாயத்து என்றால் அது இதுதான். நிச்சயமாக இது உங்களுக்கு சுகமான வாழ்க்கையை தரும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் சேமிப்பு பல மடங்காக பெருக இந்த நாட்களில் பணத்தை சேமித்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Theeya sakthi neenga Tamil. Theeya sakthi vilaga Tamil. Ethirmarai sakthi vilaga. Thayathu use.