10 நிமிசத்தில் லட்டு செஞ்சா இனி இப்படித் தான் செய்யணும் சொல்ற மாதிரி ஒரு சூப்பரான அதே சமயம் ஆரோக்கியமான லட்டு ரெசிபி. ஒன்னு சாப்பிட போதும் திரும்ப திரும்ப சப்பிட்டே இருப்பிங்க.

laddu Recipe
- Advertisement -

இப்போதெல்லாம் ஆரோக்கியம் என்பது வெறும் பேச்சளவில் மட்டும் தான் உள்ளது. அதை நடைமுறைப்படுத்து வேண்டும் என்றால் முதலில் ஆரோக்கியத்தை உணவில் இருந்து தான் தொடங்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுத்தால் மட்டுமே வளரும் இளம் தலைமுறையினர் எந்தவித நோய் பாதிப்பு இன்றி ஆரோக்கியத்துடன் வளருவார்கள். இதில் முக்கிய பங்கு பெற்றோர்களுக்கு உள்ளது. இந்த சமையல் குறிப்பு பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய அதே நேரத்தில் அதிக ஊட்டச்சத்து மிக்க ஒரு லட்டு ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த லட்டு செய்வதற்கு மக்காச்சோள மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். (இதை செய்வதற்கு மக்காச்சோள மாவில் பைன் என்று குறிப்பிட்டிருக்கும் மாவை பயன்படுத்துங்கள்). அடுத்தது அரை கப் கோதுமை மாவை எடுத்து கொள்ளுங்கள். இனிப்பிற்கு முக்கால் கப் நாட்டுச்சர்க்கரையுடன் 4 ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பைன் பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்த பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானவுடன் 10 முந்திரி பருப்பு உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 10 பாதாம் பருப்பையும் சின்னதாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் சேர்ந்து வறுப்பட்டவுடன் எடுத்து வைத்த மக்காச்சோளம் மாவை இதில் சேர்த்து விடுங்கள்.

மக்காச்சோள மாவு லேசாக வறுபட்டதும் கோதுமை மாவை சேர்த்து இரண்டையும் நன்றாக வறுக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வறுபட்டு நிறம் சிவந்து வரும் சமயத்தில் அரைத்து வைத்து நாட்டு சர்க்கரை பவுடரை சேர்த்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் வரை நன்றாக கலந்து விடுங்கள். இந்த சமயத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் நன்றாக வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு பவுலில் மாற்றி விடுங்கள். இப்பொழுது வறுத்த மாவு உதிரியாக இருக்கும் அதில் லட்டு பிடிக்க வராது. அதற்கு காய்ச்சி சூடாக இருக்கும் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் மட்டும் எடுத்து இதில் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். பாலை சூடாக ஊற்றும் பொழுது அதில் கலந்து இருக்கும் சர்க்கரை இளகி லட்டு பிடிக்கும் பதத்திற்கு மாவு தயாராகி விடும்.

இப்போது உங்களுக்கு விருப்பமான அளவில் உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான மக்காச்சோள மாவு லட்டு தயார். இதை நீங்கள் வெளியில் வைத்து சாப்பிடால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: மதுரை ஸ்பெஷல் வெள்ளை அப்பம்

குழந்தைகளுக்கு இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை அடிக்கடி செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வளருவார்கள். இனி குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக இது போன்ற உணவுகளை செய்து கொடுக்க பழகிக் கொள்ளலாம்.

- Advertisement -