மதுரை ஸ்பெஷல் வெள்ளை அப்பம் சுலபமாக 10 நிமிடத்தில் நம்ம வீட்டிலேயே செய்வது எப்படி?

- Advertisement -

மதுரையில் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் ஏராளமான வகைகள் உள்ளன. எல்லா உணவுகளிலும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய அப்பம், மதுரையில் வெள்ளை அப்பம் என்று ரொம்பவே ஸ்பெஷலாக செய்யப்படுகிறது. அந்த மதுரை ஸ்பெஷல் வெள்ளை அப்பம் ரெசிபி நம்ம வீட்டிலேயே சுலபமாக தயாரிப்பது எப்படி? என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, சோடா உப்பு – கால் ஸ்பூன், அரைத்த சர்க்கரை – கால் கப், ஏலக்காய் – 2, அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், கெட்டியான பால் – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

வெள்ளை அப்பம் செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு தேவையான அளவிற்கு கால் ஸ்பூனுக்கும் குறைவாக உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் பணியாரம் போல அப்பம் உப்பி வருவதற்கு கால் ஸ்பூனுக்கும் குறைவாக சோடா உப்பு சேர்க்க வேண்டும். ஒருமுறை நன்கு கலந்து விட்ட பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் கால் கப் அளவிற்கு சர்க்கரையும், அதனுடன் ரெண்டு ஏலக்காயையும் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த சர்க்கரையை மாவுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இந்த மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் செய்வதற்கு அரிசி மாவு சேர்க்க மாட்டார்கள். மொறு மொறு என்று கிரிஸ்பியாக வருவதற்கு, நீங்கள் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் அனைத்தையும் நன்கு கலந்து விட்டபடி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது காய்ச்சி ஆற வைத்த கெட்டியான பால் சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கால் கப் அளவிற்கு பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். நீங்கள் கலக்க கலக்க தண்ணீர் விட ஆரம்பிக்கும். கையை தண்ணீரில் நனைத்து மாவை எடுத்து கீழே போட்டால், அழகாக போண்டாவிற்கு போடுவது போல போட வர வேண்டும். அந்த பதத்திற்கு நீங்கள் மாவை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கொண்டைக்கடலை புலாவ் செய்வது எப்படி?

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொண்டு மாவில் இருந்து சிறு சிறு உருண்டையாக எடுத்து எண்ணெயில் மாவை போடுங்கள். போட்டவுடன் கரண்டியால் திருப்பி விடக்கூடாது. ஒரு ரெண்டு நிமிடம் கழித்து கரண்டியால் திருப்பி விட்டுக் கொள்ளுங்கள். எல்லா புறமும் நன்கு பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், ரொம்ப சூப்பரான டேஸ்டியான இந்த வெள்ளை அப்பம் நொடியில் தயார்! இதே போல நீங்களும் மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் செஞ்சு பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்.

- Advertisement -