சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் அதன் பலன்கள்

Sukran peyarchi astrology

வாழ்க்கை என்பதே துன்பமயமாக இருக்கிறது என்பது தான் இன்று பெரும்பாலான மக்களின் புலம்பலாக இருக்கிறது. நிலைமை இப்படியிருக்க ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை சொர்கமாக இருப்பதை கண்டு நம்மில் பலர் ஏங்குகிறோம். ஒரு மனிதனுக்கு வாழ்வில் பல விதமான சுகங்களை தரக்கூடியவர் “சுக்கிர பகவானாவார்” ஒருவரின் ஜாதகத்தில் எங்கு இருந்தால் “மாளவியா” என்னும் யோகம் ஏற்படும். அதனால் என்ன பயன் என்று பார்ப்போம் வாருங்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிர பகவான் அவரின் சொந்த ராசிகளான “ரிஷப”, “துலா” ராசிகளிலோ அல்லது சுக்கிரனின் உச்ச ராசியான “மீன” ராசியிலோ சுக்கிர பகவான் இருந்தால் அந்த ஜாதகருக்கு “மாளவியா” யோகம் ஏற்படுகிறது. இதஜற்கான தெளிவான விளக்கத்தை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம்.

Malaviya yogam
மீனத்தில் சுக்கிரன்
Malaviya yogam
துலாமில் சுக்கிரன்
Malaviya yogam
ரிஷபத்தில் சுக்கிரன்

மாளவியா யோகத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் பூரண அருளாசியைக் கொண்டவர்கள். இந்த யோகம் கொண்ட ஜாதகர்கள் நல்ல ஆரோக்கியமான உடலையும்,பிறரை வசீகரிக்கக்கூடிய உடல் மற்றும் முக அமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறந்த பின்பு இவர்கள் குடும்பத்திற்கு பெருமளவிலான செல்வம் சேரத் தொடங்கு. பல கலைகளில் ஈடுபாடும் ஒரு சில கலைகளில் நிபுணத்துவமும் பெற்றிருப்பார்கள். சிறந்த கலாரசிகர்கள். பிற உயிரினங்களின் மீது பிரியமும், தயையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பெண்கள் மீது மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டிருப்பர். இவர்களில் ஒரு சிலர் மிகப்பெரும் வைர வியாபாரிகளாக இருப்பார்கள். நறுமண திரவியங்கள், இனிப்பு பண்டங்கள் தயாரிப்பு போன்ற தொழில்கள் இவர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுக்கும். இவர்களுக்கு மிக அழகான தோற்றம் கொண்ட வாழ்க்கை துணை அமைவர். தங்கள் வாழ்வின் இறுதி வரை சீரான செல்வ வளத்தோடு வாழ்வார்கள்.