இத மட்டும் ஒருவாட்டி குடிச்சுப் பாருங்க! இனி டீ காஃபியை உங்கள் கையால் கூட தொட்டு பாக்க மாட்டீங்க!

malli-coffee
- Advertisement -

அன்றாடம் காலை மாலை இரு வேலையும் டீ காஃபிக்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமாக நம்முடைய உடலுக்கு நன்மை சேர்க்கும் இந்த காஃபிய ஒருவாட்டி போட்டு குடிச்சு பாருங்க! உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அஜீரணத்தை சீர்படுத்தும். தேவையற்ற பக்கவிளைவுகளும் ஏற்படாது. இன்றைய சூழ்நிலைக்கு இந்த காபி மிக மிக நல்லது. அது எந்த காஃபின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கு ஆசையா இருக்கா? அது என்ன காபி? அந்த காஃபியை நம் வீட்டில் எப்படி போடுவது என்று இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் போட்டு குடித்து வந்த மல்லி காஃபி தான் அது. இந்த காஃபியை முறைப்படி சுவையாக எப்படி போடுவது? 2 கப் அளவு கொத்தமல்லி காஃபி யை தயார் செய்ய தேவையான பொருட்கள். வரமல்லி – 2 ஸ்பூன், இஞ்சி – 2 சிறிய துண்டுகள், ஏலக்காய் – 2, நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய உரலில் இஞ்சியை போட்டு நன்றாக இடித்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வர மல்லி சேர்த்து ஒன்றும் இரண்டுமாக கொரகொரப்பாக இடித்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 ஏலக்காய்களையும் அந்த சிறிய உரலில் போட்டு நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (தேவைப்பட்டால் வர மல்லியை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.)

milk-boiling-stove

தண்ணீர் சேர்க்காமல் பாலை கொஞ்சம் சூடு படுத்தி அப்படியே ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நசுக்கி வைத்திருக்கும் இஞ்சி, வரமல்லி, ஏலக்காய் இந்த 3 பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். 5 நிமிடங்கள் வரை இந்த தண்ணீர் மிதமான தீயில் கொதிக்க வேண்டும். இதில் சேர்த்திருக்கும் மூன்று பொருட்களில் சாறு முழுவதும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். இறுதியாக 2 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையையும் இந்த தண்ணீரோடு சேர்த்து நன்றாக கரைத்து விடுங்கள்.

malli-coffee1

இந்த தண்ணீர் நன்றாக 5 நிமிடம் கொதித்தவுடன் ஒரு வடிகட்டியில், வடிகட்டி தண்ணீரை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பால் சேர்க்காமல் இந்தத் தண்ணீரை அப்படியே பருகினாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை சேர்க்க காய்ச்சிய பாலை ஊற்றி கலந்து பரிமாறினால் சூப்பரான வர மல்லி காபி ரெடி.

malli-coffee2

கமகம வாசத்தோடு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் இந்த காபியை நிச்சயமாக உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். ஜீரண சக்தியை அதிகப்படுத்த, சளி வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உங்க வீட்லயும் நாளையிலிருந்து இந்த காபிய போட்டு குடிச்சாலே போதும்.

- Advertisement -