கடனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து கடன் வாங்கி அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். பிறருக்கு கடனை கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். சிறிது சிறிதாக குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து வைத்து இருக்கும் நபர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தாங்கள் சேர்த்து வைத்த பணத்தையோ அல்லது நகையையோ பிறருக்கு கடனாக தருவார்கள். அவர்கள் அதை திருப்பி தந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பெயரில் தந்து இருப்பார்கள்.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களால் வாங்கிய பணத்தை திரும்பத் தர முடியாத சூழ்நிலை வரும் பட்சத்தில் வாங்கியவருக்கும் பிரச்சினை, கொடுத்தவருக்கும் பிரச்சினை என்று ஆகிவிடும். இந்த சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு முழிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதே போல் பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு அவர்கள் பணத்தை திரும்ப கட்டாத சூழ்நிலையில் தாங்கள் மாட்டிக்கொண்டு கஷ்டப்படும் நிலையும் பலருக்கு இருக்கிறது. இப்படி பிறரிடம் பணத்தை கொடுத்து விட்டு அந்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் பிறர் பட்ட கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பவர்களும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். இதற்கு சுத்தமான ஒரு சிறிய மண் கிண்ணம் அல்லது அகல் விளக்கு வேண்டும். இதை முதல் நாளே வாங்கி மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தாலும் சரி வெள்ளி வெள்ளிக்கிழமை செய்வதாக இருந்தாலும் சரி காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளோ இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் முக்கியமான பொருட்கள் பச்சை கற்பூரம் மற்றும் மல்லி விதை. அகல் விளக்கில் மூன்று துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அதை எறிய விட வேண்டும். இவ்வாறு அந்த கற்பூரம் எரியும் பொழுது நம்மிடம் யார் பணத்தை வாங்கினார்களோ அவர்கள் நம்மிடம் பணத்தை திருப்பித் தந்துவிட்டார்கள் என்று உங்களுடைய குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.
கற்பூரம் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் உங்களுடைய மோதிர விரலால் கற்பூரம் எறிந்த இடத்தில் இருக்கும் கறியை தொட்டு யாரிடம் நீங்கள் பணத்தை கொடுத்தீர்களோ அவர்களின் பெயரை எழுத வேண்டும். பிறகு இந்த பேப்பரை மறுபடியும் அந்த மண் அகல் விளக்கில் வைத்துவிட்டு அதற்கு மேல் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மல்லி விதையை வைக்க வேண்டும்.
மறுபடியும் கடன் வாங்கியவரின் பெயரை கூறி அவர் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டார் மிகவும் நன்றி என்று கூறியவாறு அந்த மல்லி விதையோடு சேர்த்து அந்த பேப்பரையும் எரிக்க வேண்டும். அது எரிந்து முடியும் வரை இஷ்ட தெய்வத்திற்கும் குலதெய்வத்திற்கும் நன்றி கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து மூன்றிலிருந்து ஐந்து வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து பணவரவு வராமல் இருந்திருந்தாலும், பணத்தை கொடுக்கக் கூடாது என்று நினைத்திருந்தாலும் அவர்களே வந்து வாங்கிய பணத்தை திரும்பத் தரும்படி நம்முடைய இஷ்ட தெய்வமும் குலதெய்வமும் அருள்புரிவார்கள்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியை வரவேற்கும் நிலை வாசல்
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.