தண்ணீர் மீது அமர்ந்து தியானம் செய்யும் அதிசய மனிதர் – வீடியோ

Ner mel thiyanam
- Advertisement -

சிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும். அப்படியான அதிசய சக்தியைப் பற்றிய தேடல்களில், யோகிகள் தங்களின் சித்தாற்றலினால் “ஆகாயத்தில் பறத்தல், உணவு நீரருந்தமல் நெடுநாட்களுக்கு உயிரோடிருந்தல், தண்ணீரின் மேல் நடத்தல்” போன்ற அதிசயங்கள் செய்ததை கேள்விப்பட்டு, அதன் மீது மிகுந்த ஈடுபாடு கொள்கிறோம். இவற்றையெல்லாம் ஒரு மனிதனால் செய்ய முடியுமா என கேட்போர்களுக்கு முடியும் என்பதே அந்த யோகிகளின் பதில். அந்த வகையில் நீரில் அமர்ந்த படியே பிளக்கும் ஒருவரின் வீடியோ இதோ.

- Advertisement -

தமிழ் நாட்டில் எங்கோ ஓரிடத்தில் பதிவுசெய்யப்பட்டது இக்காணொளி. அதில் ஒரு மனிதர் பத்மாசன நிலையில் தண்ணீரின் மீது அமர்ந்திருப்பதை
காணமுடிகிறது. அப்படி நீரில் மூழ்காமல் தியான நிலையில் இருக்கம் அந்நபர் எவ்வித ஊன்றுகோல் அல்லது வேறு ஏதேனும் கருவிகள் உதவியின்றி
நீரின் மீது அமர்ந்திருப்பதை நிரூபிக்க அவரின் உதவியாளர், அந்த யோகி அமர்ந்திருக்கும் நீரில் அடியில் சென்று நீந்தியும், கைகளை விட்டு நீட்டி அலசியும் காட்டுகிறார்.

இவ்வாறு ஒருசில முறைகள் செய்து அவர் நீரின் மீது மிதப்பதை அந்த உதவியாளர் உறுதி செய்கிறார். இதை எல்லாம் காணும் பலருக்கும் இதெல்லாம் உண்மை தானா என்கிற சந்தேகம் எழும். ஆனால் சித்தர்கள் கண்டுபிடித்த “வாசி யோகம்” என்கிற மூச்சுப்பயிற்சியை முறையாக கற்று, இறை அனுபவம் பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு தொடர்ந்து பயிற்சி செய்வோருக்கு இது போன்ற சித்து ஆற்றல்கள் வாய்ப்பது இயல்பானது.

- Advertisement -

ஆனால் பிறரை ஆச்சர்யப்படுத்த இந்த சித்தாற்றல்களைப் பயன்படுத்துவோர்கள், இறைவனுடன் கலக்கும் உயரிய நோக்கத்திலிருந்து வழி தவறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். அதனாலே தான் பெரும்பாலான சித்தர்கள் சித்தாற்றல்களை விரும்புவதையும், அதை பயன்படுத்தி அற்புதங்கள் நிகழ்த்துவதையும் கண்டிக்கின்றனர்.

எனவே ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவோர்கள் இத்தகைய அற்புத ஆற்றல்களை, இறைவன் ஒருவனை சோதிப்பதற்க்காக தருகிறார் என்று கருதி அவரை அடையும் நோக்கத்தில் தொடர்ந்து பயணிப்பதே சிறப்பு.

- Advertisement -