காலையில் எழுந்ததும் இந்த மந்திரத்தை 3 முறை உச்சரித்தால் அன்றைய நாள் முழுவதும் மன அமைதி கிடைக்கும்!

abirami-mantra
- Advertisement -

ஒவ்வொருவரும் இரவில் தூங்கும் பொழுது பலவிதமான கவலைகள் உடன் தான் தூங்கு செல்கிறோம். எந்த ஒரு மனிதன் கவலையின்றி படுத்தவுடன் தூங்கி விடுகிறானோ! அவன் தான் உண்மையிலேயே உலகின் மிகப் பெரிய பணக்காரனாக இருக்க முடியும். எத்தனை பேருக்கு படுத்தவுடன் தூக்கம் வருகிறது? மனதை வாட்டி வதைக்கும் கவலைகள் எவ்வளவோ எண்ண ஓட்டங்களாக ஓடிக்கொண்டே இருக்கும். கண்களை மூடினால் கனவுகள்! ஆனது உறக்கம் இல்லாமலேயே வரும். இதிலிருந்து விடுபடுவதற்கும், மன அமைதி கிடைப்பதற்கும் அபிராமியின் எளிய பாடல் உள்ளது. அதைப் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

abirami3

அன்னை அபிராமியின் பாடல்களில் மன அமைதி கிடைப்பதற்கு இப்பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சக்தி வாய்ந்த பாடலை மூன்று முறை பாடினால் போதும்! எத்தகைய குழப்பமான மனநிலை இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு அமைதி உண்டாகும். மனதில் பலவிதமான எண்ண ஓட்டங்கள் ஒழிந்து மனம் ஒருமுகப்படும். மனம் ஒருமுகப்படும் பொழுது நாம் வாழ்க்கையில் ஜெயிப்பதும் சுலபமாகிவிடும்.

- Advertisement -

நம்முடன் இருக்கும் நிழல் போல கவலைகளும் ஒட்டிக் கொண்டே பயணிக்கும். நாள் முழுவதும் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை இரவு தூங்கும் பொழுது கண்களை மூடும் நேரத்தில் தான் அசைபோட்டு பார்ப்பது உண்டு. இப்படி மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்கள் தூங்கிய பின்னர் சரியாகுமா? என்று கேட்டால் அதுவும் இல்லை. தூங்கி முடித்த பின்பு காலையிலும் அப்பதிவுகள் தொடர் கதையாகும். அதனால் தான் காலையில் தூங்கி எழுந்ததும் சில விஷயங்களை நாம் செய்யும் பொழுது அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்தை பெறலாம்.

abirami

காலையில் எழும் பொழுது அபிராமி அந்தாதியின் பாடலை பாடும் பொழுது மனதில் இருக்கும் குப்பைகள் வெளியேறி மனம் தூய்மை அடைந்து விடும். இதனால் மன அமைதி உண்டாகும். அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் அத்துணை பாடல்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளன. அதில் மனம் அமைதி பெற கீழ்வரும் இந்த பாடலை பாட வேண்டும்.

- Advertisement -

மன அமைதி பெற அபிராமி அந்தாதி:
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.

abirami-anthathi

எளிய பொருள் விளக்கம்:
அருள்பொழி செந்தாமரை யொக்கயென் உளத்தாமரை எழுந்தருளி
அழகுமுலைச் சிறுதாமரை மொட்டாய் ஒளிர் பாலையே அபிராமியே
அன்புவிழிக் கருணை மொழித் திருமுகத் தாமரையே திருக்கரமும்நின்
திருவடித் தாமரைப் புகலிடம் கொண்டே பேரெழில் பொங்கி மணக்கும்
தாமரைக் காடு நினைந்தே அடையேன் வேறொரு தஞ்சம்.

sleepless

காலையில் கண்விழித்ததும் இப்பாடலை பாடுபவர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மனம் அமைதி பெற்று தெளிவான சிந்தனை பிறக்கும். இதனால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலனை கொடுக்கும். யாருடைய உதவியும் இல்லாமல் உங்களால் சுயமாக, தீர்க்கமாக முடிவு எடுக்க முடியும். மனதில் சாந்தம் குடிகொள்ளும். அடிக்கடி கோபப்படுபவர்கள், பிறரின் உதவியின்றி முடிவு எடுக்க முடியாதவர்கள், தெளிவு இல்லாதவர்கள் இப்பாடலை கட்டாயம் பாடி பயன் பெறலாம்.

- Advertisement -