- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமன அழுத்தம் நீங்க வழிபாடு

மன அழுத்தம் நீங்க வழிபாடு

- Advertisement -

அந்த காலத்தில் எல்லாம் மன அழுத்தம் என்றால் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது. இப்போது சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம், டிப்ரஷன் என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டு திரிகிறது. இந்த மன அழுத்தம் எப்படி வருகிறது எதனால் வருகிறது என்று தெரியவில்லை. இந்த மன அழுத்தம் நீங்குவதற்கு, மருத்துவரையெல்லாம் அணுகி, மனநோயை சரி செய்ய, மருந்து மாத்திரை சாப்பிடும் அளவுக்கு இன்றைய சூழ்நிலை மோசமாக மாறி வருகிறது.

இரவு தூக்க மாத்திரை போட்டால் தான் சில பேருக்கு தூக்கமே வருகிறது. என்னவோ காலம் மாற மாற, மனிதர்களுடைய வாழ்க்கை முறையும் மாறிவிடுகிறது. நீங்கள் இந்த மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

மன அழுத்தம் நீங்க வழிபாடு

இந்த வழிபாடு எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் இருந்தும் உங்களை வெளியே கொண்டு வரும். ஆனால் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு கடவுள் நம்பிக்கை நிச்சயம் தேவை. உங்களுடைய இஷ்ட தெய்வம், எந்த தெய்வத்தை வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டிற்கு நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் முதல் நாள் எந்த இஷ்ட தெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்ய தொடங்குகிறீர்களோ, அதே தெய்வத்தை நினைத்துதான் வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

மன அழுத்தம் நீங்க இந்த வழிபாட்டை செய்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து விட வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியும் என்றால் ஏற்றலாம். இல்லையென்றால் தனியாக வரவேற்பு அறையிலேயே ஒரு மண் அகல் விளக்கை தட்டின் மேலே ஏற்றி வைத்துக் கொள்ளவும். கண்களை மூடக்கூடாது.

- Advertisement -

அந்த விளக்கை பார்த்தபடி உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தைச் சொல்ல வேண்டும். ஓம் நமசிவாய சொல்லலாம், ஓம் சக்தி சொல்லலாம், சரவணபவ சொல்லலாம், ஸ்ரீ ராம ஜெயம் சொல்லலாம், மந்திரம் உங்களுடைய இஷ்டம் தான். பிள்ளையாரின் பெயரை கூட சொல்லலாம். மந்திரத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது.

ஆனால் எந்த கடவுளின் நாமத்தை முதல் நாள் நீங்கள் சொல்லுகிறீர்களோ அதை நாமத்தை தினமும் நம்பிக்கையோடு சொல்லி இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 15 லிருந்து 20 நிமிடங்கள் அந்த தீபச்சுடரை கண்களால் பார்த்து உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரித்தாலே உங்களுடைய மன அழுத்தம் நீங்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டு நீங்காத மன அழுத்தம் இந்த ஒரு சின்ன தீப சுரின் மூலம் நீங்குமா என்ற சந்தேகம் பலபேருக்கு வரும். தொடர்ந்து 11 நாள் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். வழிபாடு செய்வதற்கு முன்பு உங்களுக்கு இருந்த மனநிலைக்கும், வழிபாடு செய்த பிறகு உங்களுக்கு இருக்கும் மன நிலமைக்கும் நிச்சயம் நல்ல வித்தியாசம் தெரியும்.

மன அழுத்தத்திற்கு நிச்சயமாக ஒரு மனிதனுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். அந்த காரணம் எல்லாம் ஒண்ணுமே இல்லை. எல்லாமே கடவுள் தான், கடவுளின் கிருபையால் தான் நமக்கு நல்லது கெட்டது நடக்கிறது என்ற பக்குவம் தானாக உங்களுக்குள் வந்துவிடும். தானாக அந்த மன அழுத்தம் படிப்படியாக குறைய தொடங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்கள் விலக பரிகாரம்

வழிபாட்டை முடித்துவிட்டு தாராளமாக நீங்கள் தூங்க செல்லலாம் பெண்கள் மாதவிடாய் நாட்களில் கூட இந்த வழிபாட்டை தவிர விடாமல் செய்யலாம் பூஜை அறையில் இருக்கும் விளக்கை தொடராமல் தனியாக வரவேற்பு அறையில் விளக்கை ஏற்றி வைக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்