- Advertisement -

மன பயம் நீங்க பரிகாரம்

- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் தேவையற்ற பயம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். காரணமே இல்லாமல் பயப்படுபவர்களுடைய கோழைத்தனத்தை என்ன செய்தாலும் போக்கவே முடியாது. ஏதாவது காரணம் இருந்து பயந்தால் பிரயோஜனம் உள்ளது. காரணமே இல்லாமல் 24 மணி நேரம் பயந்து கொண்டே இருந்தால் மன நிம்மதியும் இருக்காது.

ஆரோக்கியமும் இருக்காது. நல்ல தூக்கமும் இருக்காது. வாழ்க்கையில் ஒரு சந்தோஷமும் இருக்காது. சில பேருக்கு பேய் பிசாசால் பயம், சில பேருக்கு செய்வினை பாதிப்பால் பயம், சில பேருக்கு எதுவுமே இல்லாத பயம். உங்க வாழ்க்கையில் இதுபோல பிரச்சனை இருக்கா. இப்படி உங்களுடைய மனதில் எந்தவிதமான பயம் இருந்தாலும் சரி இந்த ஒரு பரிகாரத்தை செய்யுங்கள் மனபயம் நீங்கும் மனது தெளிவு பெறும்.

- Advertisement -

மனபையும் நீக்கும் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரே ஒரு நிலக்கரி தூண்டு தேவை. எப்படியாவது ஒரு நிலக்கரி துண்டை வாங்கிக் கொள்ளுங்கள். கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு காட்டன் துணியில் இந்த நிலக்கரி துண்டை வைத்து முடிச்சு போட்டு தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் தேவையற்ற மன பயம், மனக்குழப்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி துண்டை அடிக்கடி மாற்ற வேண்டாம். 48 நாட்கள் இந்த முடிச்சை தலை எனக்கு அடியில் வைத்து தூங்கும் போது உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரிய தொடங்கும்.

இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். பயத்தால் நிறைய பேர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும் கூடிய விரைவில் நல்ல பலனையும் கொடுக்கும்.

- Advertisement -

அதேபோல மன பயம் நீக்குவதற்கு வழிபட வேண்டிய கடவுள் அனுமன். அனுமனை 24 மணி நேரமும் நீங்கள் நினைத்துக் கொண்டே இருங்கள். அதாவது வேலை செய்யாமல் அனுமனையே நினைக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். இந்த நாமத்தை கேட்க அனுமதி உங்கள் பக்கத்திலேயே அமர்ந்திருப்பார். அப்போது எவ்வளவு பெரிய மன பயம் இருந்தாலும் அது சரியாகிவிடும்.

தூங்குவதற்கு முன்பாக அனுமனின் திருவுருவப்படத்தை 5 நிமிடங்கள் பார்த்து அந்த உருவத்தை உங்களுடைய மனதில் நிலை நிறுத்திக் கொண்டு கால் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவி விட்டு தூங்கச் செல்லுங்கள். தலையணைக்க அடியில் நிலக்கரியும் இருக்கட்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றாக சேரும்போது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அபரிவிதமான நிம்மதியை அடைவீர்கள்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் செயல்பட பரிகாரம்

எவ்வளவு பெரிய பிரச்சினையால் மனநிம்மதி கெட்டுப் போயிருந்தாலும் அது எல்லாம் தூசு போல காணாமல் போய்விடும். நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம். நல்லது நினைப்பவர்களுக்கு நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்