பைரவருக்கு இந்த 1 மாலையை போட்டாலே போதுமே! வாழ்க்கையில் எந்த கஷ்டம், எப்படி வந்தாலும் சரி, எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், மன உறுதியும் உங்களுக்குள் வந்துவிடும்.

bairavar

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா? நமக்கு இருக்கும் மன பயம். மன பயம் இல்லாமல், வரக்கூடிய, கஷ்டங்களை உறுதியோடு தைரியத்தோடு எதிர் கொண்டாலே போதும். கஷ்டங்கள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடும். ஒருவருக்கு வாழ்க்கையில் மன தைரியமும், உறுதியும் எப்போது வரும்? தன்னுடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக யாராவது ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை, அவர்களுக்குள் வர வேண்டும். அதாவது வாழ்க்கையில் தனி மரமாக நிற்காமல், நமக்கு என்று ஒரு சப்போர்ட், அந்த சப்போர்ட் நம்மிடம் இருக்கும் பணமாக இருக்கலாம், நம்மிடம் இருக்கும் உறவுகளாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், இப்படியாக ‘நமக்கு என்று ஒருவர் இருக்கின்றார் என்ற அந்த நம்பிக்கையே’, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பயத்தை, தடுமாற்றத்தை போக்கிவிடும்.

bairavar

சரிங்க! பணம் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு கிடையாது. உறவினர்கள் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு கிடையாது. உங்களுக்கு வாழ்க்கையில உறுதுணையாக நிற்க சப்போர்ட் செய்ய யாருமே இல்லை என்றாலும், பரவாயில்லை. அந்த கடவுளை, உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக, உங்கள் பக்கம் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆன்மீக ரீதியாக உங்களது மன தைரியத்தை அதிகப்படுத்த, மன உறுதியை வலிமை படுத்திக்கொள்ள பைரவர் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பைரவருக்கு அணிவிக்கபோகும் இந்த மாலையை தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். மஞ்சள் நிற நூல், 11 எலுமிச்சம்பழம், 11 தாமரை மலர்கள், இவைகளை வாங்கிக்கொள்ளுங்கள். நூலைக் கொஞ்சம் தடிமனாக எடுத்துக்கொள்ளுங்கள் மாலை அவிழ்ந்துவிட கூடாது.

senthamarai

நூலில் ஒரு தாமரை, ஒரு எலுமிச்சம்பழம், ஒரு தாமரை ஒரு எலுமிச்சம்பழம் இப்படியாக ஒவ்வொன்றாக கோர்த்து மாலையாக தொடுத்து, பைரவருக்கு அணிவிக்க வேண்டும். மாலையை கோர்க்கும் போது ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதுக்குள் உச்சரிக்கவேண்டும். தேவையற்ற எண்ணங்களில் மனதை அலைபாய விடக்கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்தி இந்த மாலையை பைரவருக்கு தயார் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த மாலையை தேய்பிறை அஷ்டமியில் மாலை நேரத்தில் பைரவருக்கு அணிவிக்க வேண்டும். அஷ்டமி தினத்தில் உங்களால் பைரவரை வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வாரம்தோறும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் இந்த மாலையை பைரவருக்கு செலுத்தினாலும் நல்ல பலனை கொடுக்கும். எந்த பைரவருக்கு வேண்டுமென்றாலும் இந்த மாலையை நீங்கள் அணிவிக்கலாம். அஷ்ட பைரவரில் எல்லா பைரவரும் மன தைரியத்தை கொடுக்க கூடியவர்கள் தான்.

lemon

தேய்பிறை அஷ்டமியில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதாக இருந்தால், 8 மாதம் தொடர்ந்து எட்டு முறை இந்த மாலையை பைரவருக்கு அணிவிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வதாக இருந்தால் 8 வாரங்கள். இப்படியாகத் தொடர்ந்து நீங்கள் இந்த வழிபாட்டை, இந்த மாலையை பைரவருக்கு அணிவித்து வரும்போது எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி உங்களுக்கு வந்து விடும்.

kaala bairavar

எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் உங்களுக்குள் வந்து விடும். அந்த பைரவரே, உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சப்போர்ட் செய்ய பக்கபலமாக உங்கள் பக்கத்தில் வந்து நிற்பதாகவே தோன்றும். அந்த பைரவரை மனதார வேண்டிக்கொண்டு, எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.