மாரியம்மன் கோவிலுக்கு போய் இந்த 1 பொருளை தானம் செய்யுங்கள். தீராத மன குழப்பம் தீரும். சிக்கலான பிரச்சனையில் இருந்து உடனே விடுபடுவீர்கள்.

amman
- Advertisement -

குழப்பங்கள் மனதில் அதிக அளவு இருந்தால், எந்த வேலையிலும் நம்மால் கவனம் செலுத்தி வெற்றி பெற முடியாது. மன குழப்பம் இல்லாத, தெளிவான மனதை பெற வேண்டும் என்றால் நாம் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம். சிக்கலில் இருந்து விடுபட, சிக்கலே இல்லாத ஆன்மீகம் சார்ந்த எளிமையான வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சில பேர் வாழ்வதே குழப்பத்தில் தான் இருக்கும். எப்போதுமே மனது தெளிவாக இருக்காது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது. உங்களுடைய மனது குழப்பமாக இருந்தால், இந்த பதிவை முழுமையாக படியுங்கள். நிச்சயமாக உங்களுக்கு தெளிவு பிறக்கும்.

மனக்குழப்பம் நீங்க மாரியம்மன் பரிகாரம்:
இரண்டு திங்கட்கிழமைகள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். சுத்தமான பசும்பால் வாங்கி சர்க்கரை, ஏலக்காய், போட்டு மணக்க மணக்க காய்ச்சி மாரியம்மனுக்கு பிரசாதமாக நிவேதனம் வைத்து, அதை டம்ளரில் ஊற்றி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

குழந்தைகளுக்கும் தானமாக கொடுக்கலாம். திங்கட்கிழமை அன்று பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்தால் மனக்குழப்பம் தீரும். பால் சாதம் கூட செய்து கொடுக்கலாம். முடியாதவர்கள் சாம்பார் சாதம் செய்து கொடுங்கள். ஆனால் முதலிடத்தில் இருப்பது பால். பால் தானம் கொடுக்க முடியாத பட்சத்தில் அடுத்த இரண்டு பொருட்களை தானம் கொடுப்பது சிறந்தது.

உங்களால் முடிந்தவரை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஜீவசமாதிகளுக்கு சென்று இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பத்து நிமிடம் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். மனக்குழப்பம் உடனடியாக நீங்கும். திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட ஒரு தீர்வை தரக்கூடியது தியானம் இது. இந்த தியானத்தை வியாழக்கிழமை செய்யலாம். அப்படி இல்லை என்றால் திங்கட்கிழமை செய்யலாம்.

- Advertisement -

வாய்ப்பு கிடைத்தால் ஏதாவது ஒரு அருவிக்கு போய் குளித்துவிட்டு வாருங்கள். ஜாக்கிரதையா போங்க. பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக அஜாக்கிரதையாக சென்று, ஆபத்து தரும் அருவிகளில் குளிக்க கூடாது. எந்த அருவியாக இருந்தாலும் சரி, அந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவிட்டு வருவது மன பாரத்தை குறைக்கும். மனதை தெளிவுப்படுத்தும். அருவியல் குளிக்க முடியாதவர்கள் ஐந்து நிமிடம் அமர்ந்து நீர் வீழ்ச்சியை பார்த்தாலே மனதுக்கு நிம்மதி.

ஏழை மீனவர்கள் இருப்பார்கள். கடலோரங்களில் சென்றாலே கண்டுபிடித்து விடலாம். மீன் பிடிக்கக் கூடியவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருக்கும் மீன் பிடி தொழில் செய்வதில். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த உதவியை செய்வதன் மூலமாகவும் மனக்குழப்பம் தீரும்.

இதையும் படிக்கலாமே: கோவிலுக்கு செல்லும்போது இந்த ஒரு தவறை செய்தால், நீங்கள் சாமி கும்பிட்ட பலன் கிடைக்காது. கோவிலுக்கு செல்லும்போது செய்யவே கூடாத அந்த முக்கியமான தவறு என்ன?

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமுத்திரத்திற்கு சென்று தலைக்கு குளித்து வந்தால், மனபாரம் குறையும். இப்படியாக மேல் சொன்ன பரிகாரங்களில் உங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். ஏதாவது ஒன்றை செய்தாலும் நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயமாக மனபாரம் குறைந்து தெளிவு பெறுவீர்கள். வாழ்வில் இன்பமாக வாழ்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -