கோவிலுக்கு செல்லும்போது இந்த ஒரு தவறை செய்தால், நீங்கள் சாமி கும்பிட்ட பலன் கிடைக்காது. கோவிலுக்கு செல்லும்போது செய்யவே கூடாத அந்த முக்கியமான தவறு என்ன?

temple-prayer
- Advertisement -

இன்னைக்கு யாருமே ஒரு கோவிலுக்கு போறீங்க அப்படின்னா, ஆன்மீக சிந்தனையோடு செல்வது கிடையாது. டூர் போவது போல தான் கோவிலுக்கு போகக்கூடிய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணம் சென்று வருவது போல, கோவிலுக்கு சென்று வருகிறோம். அவ்வளவு தான். மற்றபடி கோவிலுக்கு சென்று இறைவனை உணர்ந்து, இறை நினைப்போடு இருந்து இறைவனை வழிபாடு செய்யக்கூடிய காலம் எல்லாமே மலையேறிப் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நாம் எல்லோருமே கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தெரியும். நான், நீங்கள் எல்லோருமே வண்டியில் பயணிக்கும் போது, சினிமா பாட்டு தான் கேட்கின்றோம். வீடு திரும்பும் போது சினிமா பாட்டு தான் கேட்கின்றோம். சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை தான் கைப்பேசியில் பார்க்கின்றோம். இப்போது வண்டிக்கு உள்ளதே டிவி பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.

ஏதாவது ஒரு சினிமா படத்தை போட்டு பார்த்துக்கொண்டு கோவிலுக்கு செல்கின்றோம். பார்த்துக் கொண்டே வீட்டிற்கு வருகின்றோம். இப்படி இறை சிந்தனையே இல்லாமல் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்து விட்டு, இறை சிந்தனையே இல்லாமல் வீட்டிற்கு வருவதன் மூலம் என்ன பயன். இறைவனை நாம் எப்படி தான் உணர்வது. இறைவனை கோவிலுக்கு சென்று எப்படி தான் வழிபாடு செய்வது.

- Advertisement -

இறையருளை பரிபூரணமாக பெற செய்ய வேண்டியவை:
ஒரு கோவிலுக்கு செல்ல போகின்றோம். அங்கு இருக்கும் இறைவனைப் பார்த்து வழிபாடு செய்யப் போகின்றோம் என்றால், மன நிறைவோடு அந்த இறைவனைப் பற்றிய சிந்தனையோடு தான் நாம் பயணம் செய்ய வேண்டும். இறை சிந்தனையோடு கோவிலுக்கு சென்று மனம் உருகி இறைவனை வேண்டி வழிபாடு செய்ய வேண்டும். தினம் தினம் கோவிலுக்கு செல்பவர்களாக இருந்தால் கூட, இப்போது கோவிலுக்கு சென்றவுடன் அந்த இடத்தில் இருக்கும் கூட்டத்தை பார்த்து மனம் நொந்து போய் வெம்பிபோய் வருகிறார்கள்.

கூட்டம் இருந்தால் கூட, அடித்துப் பிடித்து முந்தி போய் சாமி பார்க்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். நீங்கள் கோவிலுக்குள் சென்று விட்டீர்களா. கடவுளுக்கு தெரிந்து விடும். இவன் இன்று கோவிலுக்கு வந்திருக்கின்றான் என்று. உங்களுடைய வேண்டுதலை கோவிலுக்குள் நின்று, எந்த இடத்தில் இருந்து சொன்னாலும் அந்த இறைவனின் செவிகளில் கேட்கும். சாமியை போய் அடித்து முட்டிக்கொண்டு பார்த்து வேண்டுதல் வைத்தால் தான் பலிக்கும் என்பது கிடையாது.

- Advertisement -

ஆகவே, அந்த தவறை செய்யாதீங்க. நீங்க நின்ற இடத்தில் இருந்து இறைவனை வழிபாடு செய்யுங்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மனதிற்குள் இறைவன் கண் முன்னே தெரிய வேண்டும். அதற்காக கோவிலுக்கு சென்று மூலவரை பார்க்காமல் திரும்பி வருவதா என்ற கேள்வியை கேட்க வேண்டாம். பார்க்க வேண்டும். அதுவும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் மக்கள், சுவாமி பார்க்கும் வரிசையில், முன்னாடி யாராவது நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தால், அவர்களை கண்டபடி பேசி திட்டி, ஒதுங்கு என்று சொல்லி, நீ மட்டும் சாமி பார்த்தால் போதுமா என்று சொல்லி, அனாவசியமான கேள்விகளை கோவிலிலேயே எழுப்பி, அடுத்தவர்களுடைய மனம் நோகும்படி நடந்து கொள்கிறார்கள். அடித்துப் பிடித்து பிடித்து தள்ளி சாமி பார்க்கிறார்கள். இதெல்லாம் மிக மிக தவறு. இப்படி சாமி கும்பிட்டால் நமக்கு பலன் நிச்சயமாக கிடைக்காது. அதில் பாசிட்டிவ் வைப்ரேஷனே இல்லை.

- Advertisement -

எதற்காக கோவிலுக்கு செல்கின்றோம். மன அமைதியை தேடி. அந்த மன அமைதியை கெடுக்கும் படி இப்படிப்பட்ட சம்பவங்களை கோவிலில் நாம் நிகழ்த்தலாமா. மனதை அமைதிப்படுத்தி கோயில் இருக்கும் அந்த நேர்மறை ஆற்றலை உணர்ந்து, இறை சக்தியை உணர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்று முடித்துவிட்டு வீடு திரும்பும் போது கூட அசைவம் சாப்பிடக்கூடாது.

கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் போது தெரிந்தவர்கள் வீட்டிற்கோ சொந்தபந்தங்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது. போகும்போது சுவாமி சம்பந்தப்பட்ட படங்கள், சுவாமி சம்பந்தப்பட்ட பாடல்களை கேளுங்கள். வண்டியில் வீடு திரும்பும் போதும் சுவாமி சம்பந்தப்பட்ட விஷயங்களை சிந்தியுங்கள். இதையெல்லாம் உணர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி எந்த ஒரு கோபமும் கொள்ளாமல், பக்குவப்பட்டு என்று நீங்கள் சாமியை உணர்ந்து வழிபாடு செய்கிறீர்களோ அன்றைக்கு உங்களுடைய நிலை மாறும்.

இதையும் படிக்கலாமே: பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த 1 பொருளை சாப்பிட வையுங்கள். கோடிக்கணக்கில் இருக்கும் கடனை கூட, கொஞ்ச நாளில் அடைத்து விடலாம்.

நீங்கள் அன்று மனிதனாக இருக்க மாட்டீர்கள் மகானாக மாறிவிடுவீர்கள். மகானாகும் தகுதியை பெறுவது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தாலும், நல்ல மனிதராக மாறுவதற்கான வழியையாவது நாம் தேடு வேண்டும் அல்லவா. அதற்கான ஆன்மீகம் சார்ந்த வழிமுறைகள் தான் இவை. ஒரு முறை மேல் சொன்ன இந்த சின்ன சின்ன விதிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சென்று வாருங்களேன். வேற லெவல் சேடிஸ்பேக்சன் கிடைக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -