- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனக்குழப்பத்திலிருந்து விடுபட சொல்ல வேண்டிய மந்திரம்

மனக்குழப்பத்திலிருந்து விடுபட சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

மனிதர்களுக்கு வாழ்க்கையில் அடிக்கடி இக்கட்டான சூழ்நிலை வருவது இயல்புதான். இக்கட்டான சூழ்நிலை வரும்போது, அந்த பிரச்சனை நமக்கு மன குழப்பத்தை கொடுத்து விடும். எந்த முடிவை எடுத்தால் நல்லது, எந்த முடிவை எடுத்தால் நமக்கு சாதகமாக அமையும் என்று சிந்தித்து சிந்தித்து மூளை குழம்பி போகும். சில சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு சாதகமாக அமையும்.

சில சமயங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கு பாதகமாக அமையும். ஒரு சில பேர் தன்னுடைய பிரச்சனைக்கான முடிவை, தானே எடுக்க மாட்டார்கள். நம்முடைய பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் சொல்லி, அதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அடுத்தவர்கள் ஒரு தீர்வை நமக்கு சொல்ல, அதில் நாம் குழம்பி போய் இறுதியாக ஏதோ ஒரு முடிவு எடுப்போம். அந்த முடிவு நமக்கு சாதகமாகவும் அமையாது. பிறகு புலம்பி புலம்பி தீர்ப்போம்.

- Advertisement -

நமக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கான தீர்வை நாம்தான் எடுக்க வேண்டும். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பது தவறு என்று சொல்லவில்லை. அடுத்தவர்களுடைய முடிவை அப்படியே மறுபரிசீலனை செய்யாமல் நாம் ஏற்றுக் கொள்வது தான் தவறு. சரி நீங்களும் ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி விட்டீர்கள். அதிலிருந்து விடுபட வழி தெரியவில்லை. என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்கள்.

குழப்பம் தீர சொல்ல வேண்டிய மந்திரம்

அந்த சமயத்தில் மனதார குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த தெய்வத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பெருமாளின் ஆயிரம் நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நாமம்தான் ‘ஓம் கஹனாய நமஹ !’ என்ற இந்த நாமம்.

- Advertisement -

இந்த மந்திரத்தை மனம் உருகி ஒரு 27 முறை சொல்லிவிட்டு, பிரச்சினையை அப்படியே விட்டு விடுங்கள். உங்களுக்கான நல்லது எது என்பதை அந்த எம்பெருமானே உங்களுக்காக காட்டிக் கொடுப்பான். முக்கியமான விஷயத்திற்கு முடிவு எடுக்கும்போது எப்போதுமே அவசரம் கூடாது. அவசரத்தில் எடுக்கும் முடிவு தவறாக இருக்கும். முதலில் உங்களை நிதானத்திற்கு கொண்டு வந்து அதன் பின்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

உதாரணத்திற்கு பெரிய பண கஷ்டம் வரும். இருக்கும் வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை வரும். வீட்டை விற்கலாமா, கடன் வாங்கலாமா, என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது. அதுபோல இக்கட்டான சூழ்நிலையில் இந்த மந்திரத்தை சொல்லும்போது என்ன முடிவை எடுக்கலாம் என்பது தெரியும். தொழில் துவங்கலாமா, வேலைக்கு செல்லலாமா? என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும். எதை செய்வது என்று அன்று தெரிந்திருக்காது.

- Advertisement -

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு ஒரு முடிவை எடுங்கள். உங்கள் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அதை அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான். பன்னிரண்டாவது முடித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பு தேர்ந்தெடுப்பது என்பதில் சில பேர் நிறைய குழம்பி, அவர்களுக்கு ஒத்து வராத படிப்பை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொள்வார்கள்.

இது போல அவரவர் வாழ்வில் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் வரும். அதில் எல்லாரும், எல்லா நேரத்திலும் சரியான முடிவு எடுப்பதில்லை. ஒரு சில நாட்கள் கடந்து வந்த பிறகு ‘அப்போதே என் வாழ்க்கையின் முடிவை சரியாக எடுத்திருந்தால், இன்று வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்’ என்று நிச்சயம் புலம்பாத மனிதர்களே கிடையாது. கண்கட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்லுவார்கள். இது போல உங்களுடைய வாழ்க்கையையும் நீங்கள் வீணடித்துக் கொள்ளக்கூடாது.

இதையும் படிக்கலாமே: ருண ஹர சதுர்த்தி வழிபாடு

அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு நாம் முடிவு எடுக்கக் கூடாது. எல்லோருடைய வாழ்வும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. இனி உங்கள் வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலை வரும் சமயத்தில் எம்பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவு பெறுவீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல முடிவை தேர்ந்தெடுத்து கொடுப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்