நம்மில் பலரும் தங்களுடைய தற்போதைய சூழ்நிலை என்ன என்பதை பற்றி ஆராய்வதோடு எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற யோசனையும் அதிகரித்து அதை செயல்படுத்துவதற்காக பலவிதமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். ஆனால் இதற்கு நேர் மாறாக ஒரு சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எந்த சிந்தனையும் இல்லாமல் தனிமையில் தங்களுடைய விருப்பத்தை போலவே நடந்து கொள்வதற்குரிய வழியில் மட்டும் நடந்து செல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய சித்தர் வழிப்பாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மனக்குழப்பத்தை நீக்கும் வழிபாடு
ஒருவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்கள் தான் காரணமாக திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக ராகு கேது சனீஸ்வர பகவான் போன்றோரின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் தான் அவர்களுடைய வாழ்க்கையும் அமைந்திருக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் கேது மற்றும் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் ஒன்றாக திகழ்வதுதான் தீராத மனக்குழப்பம். திடீரென்று நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு பிரச்சினை ஏற்பட்ட அதன் மூலம் மன குழப்பம் வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலருக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது இருப்பினும் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களும் சரி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை பற்றி யோசிக்காமல் தன்னுடைய நிலை என்ன என்பதை பற்றி சிந்திக்காமல் இருக்க கூடிய நபர்களுக்கும் கேது மற்றும் சனீஸ்வர பகவானால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
கேது மற்றும் சனீஸ்வர பகவானால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடியவர்களுக்கு எந்தவித செயலிலும் நாட்டம் இருக்காது. யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்க மாட்டார்கள். தாங்கள் தங்களுடைய இஷ்டம் போலவே செயல்படுவார்கள். அப்படி செயல்படுவதன் மூலம் எந்தவித பலனும் ஏற்பட்டு இருக்காது. இருப்பினும் தனிமையை மட்டுமே விரும்பக் கூடிய நபர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று மகான்கள் மற்றும் சித்த புருஷர்களை வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் அருகில் இப்படிப்பட்டவர்களின் ஆலையம் இருக்கும் பட்சத்தில் அங்கு சென்று வழிபாடு செய்யலாம் அல்லது யாராவது ஒரு சித்தரையோ அல்லது மகான்களையோ தங்களுடைய குருவாக நினைத்து வீட்டு பூஜை அறையில் அமர்ந்து அவர்களுக்காக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அவர்களின் பெயரையே மந்திரமாக கூறியும் வழிபாடு செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் ஜாதகத்தில் பாதகமான சூழ்நிலையில் இருக்கக்கூடிய கிரகங்கள் சாதகமாக மாறி அவர்களுடைய எதிர்காலம் சிறந்த முறையில் அமைவதற்கு உதவி செய்யும். இதோடு மட்டுமல்லாமல் தினமும் இவர்கள் 20 நிமிடமாவது வஜ்ராசனம் செய்வதன் மூலமும் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: வெற்றியைத் தரும் சுதர்சன சக்கர வழிபாடு
சனீஸ்வர பகவான் மற்றும் கேதுவினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டும் நீங்க வேண்டும் என்று நினைக்காமல் நாம் அனைவருமே எதிர்காலத்தில் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த வழிபாட்டையும் ஆசனத்தையும் செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.