எந்நேரமும் மன நிம்மதியோடு வாழ மந்திரம்

Siva-lingam-1

மனிதர்களாகிய எல்லோரும் உடல் சார்ந்த பல இன்பங்களை அனுபவித்தாலும், அவர்களின் மனம் திருப்தியடையாமல் இருக்கும் போது அவர்களுக்கு எத்தகைய இன்பங்களும் முழுமையானதாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் என்ன காரணத்தினாலோ மனம் அமைதியடையாமல், எந்நேரமும் மன சஞ்சலத்தோடு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் மனம் அமைதியடைவதற்கான மந்திரம் தான் இது.

Siva lingam

மந்திரம்:
“சர்வேசம் ஸ்வஸ்திர் பவந்து
சர்வேசம் ஷாந்தி பவந்து
சர்வேசம் பூர்ணம் பவந்து
சர்வேசம் மங்கலம் பவந்து”

பொது பொருள்
“எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும். எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும். எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும். எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்”

இதையும் படிக்கலாமே:
உயர் பதவி அடைய சூரியன் மந்திரம்

இம்மந்திரத்தை எப்போதெல்லாம் உங்கள் மனம் அமைதியின்றி ஏதேனும் ஒரு காரணத்தால் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் மனம் அமைந்து அடையும்வரை இம்மந்திரத்தை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபிக்க வேண்டும். மேலும் தினமும் காலையில் உறக்கத்திலிருந்து எழுந்தவுடன், இம்மந்திரத்தை மூன்று முறை கூறி, அன்றைய தினத்தை தொடங்க, அந்த நாள் முழுவதும் நீங்கள் நேர்மறை சக்தியால் நிறைந்திருப்பதை உணர்வீர்கள்.