மன நிம்மதி இன்மை, மன சஞ்சலம் ஏற்படுவது இவை அனைத்தும் சரியாகி மனதில் மகிழ்ச்சி ததும்ப இந்த அற்புத தீபத்தை ஏற்றிடுங்கள்

vilakku
- Advertisement -

நமது வீட்டிற்கு வருகிறவர்கள் ஒரு சிலர் இந்த வீட்டில் ஏதோ தெய்வ குற்றம் இருக்கிறது, தெய்வ கடாட்சம் இல்லை, தெய்வ அனுகூலம் இல்லை, இந்த வீட்டில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறுவார்கள். அப்படி இல்லாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு நாள் செல்ல செல்ல அந்த வீட்டில் ஏதோ சொல்ல முடியாத ஒருவித எதிர்மறை அதிர்வு இருப்பதை உணர்ந்து கொள்வார்கள். ஏதோ ஒன்று நம்மை பின்தொடர்கிறது, இரவில் என்னை அழுத்துகிறது, எனது கண்ணுக்கு மட்டும் அது தெரிகிறது என்று தங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் சொல்வார்கள். பல நாட்களாக நன்றாக இருந்த அந்த வீட்டில் திடீரென இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கக்கூடும். அப்படி இல்லாமல் வரவுக்கு மேல் செலவு அதிகமாக இருக்கும், பணத்தட்டுப்பாடு ஏற்படும், பொருள் சேர்க்கை இருக்காது, இவ்வாறு பல பிரச்சனைகள் நிறைய குடும்பங்களில் இருக்கும். இவற்றிற்கான காரணம் என்ன என்பதைப் பற்றியும், அதற்கான தீர்வு என்ன என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

murugan

ஒரு சிலருக்கு தினமும் இரவில் சொல்ல முடியாத குழப்பமான பயமுறுத்துகின்றன கனவுகள் வர ஆரம்பிக்கும், எந்தவித தவறும் செய்யாமல் தங்களது மனதில் ஒருவித பயம் இருக்கும், அது ஆண்களாக இருந்தாலும் அவர்கள் அடி மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் இவ்வாறான பிணிகள் நம்மை ஆட்கொள்ளாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய ஒரு வழிமுறை தான் நிம்பம் தீப வழிபாடு வழிமுறையாகும்.

- Advertisement -

நிம்பம் என்றால் வேம்பு என்ற ஒரு பொருள் உண்டு. அகல் விளக்கில் வேப்ப எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் இறை அருளை பெறமுடியும். லட்சுமி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நமது வீட்டில் நிறைந்திருக்கும். சனி, ஞாயிறு, திங்கள் இந்த மூன்று தினங்களில் ஏதேனும் ஒரு தினத்தன்று இதனை செய்தாலும் போதும் அல்லது மூன்று தினங்கள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி இறைவனை வழிபட்டாலும் நமது வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை அடியோடு விரட்ட முடியும்.

veppa-ennai

அதற்காக முதலில் பூஜை அறையின் முன்பு வெற்றிலையின் மீது பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து அதன்மீது அகல் விளக்கை வைத்து, அதில் வேப்ப எண்ணையுடன், இழுப்பை எண்ணெய் சேர்த்து வாழைத்தண்டு திரிபோட்டு மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபங்கள் மற்றும் பூஜையை கிழக்கு திசை நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ செய்யலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி எந்தவித பூஜையையும் செய்திடக் கூடாது. தீபத்தையும் ஏற்றி விடக்கூடாது.

agal-vilakku-deepam

இந்த விளக்கு பூஜையைத் தொடர்ந்து செய்துவர உங்கள் மனசஞ்சலங்கள் அனைத்தும் தீர்ந்து மன மகிழ்ச்சி பெருக்கெடுக்க ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். உங்கள் வீட்டில் தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்கும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமது சித்தாந்திகள் சொன்ன வேதவாக்கு இதுவாகும்.

- Advertisement -