- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனப்பிரச்சனை தீர்க்கும் பதிகம்

மனப்பிரச்சனை தீர்க்கும் பதிகம்

- Advertisement -

இப்போதெல்லாம் யாரை கேட்டாலும் எனக்கு ஸ்ட்ரெஸ், மன இறுக்கம், மன அழுத்தம் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அப்படி என்ன வாழ்க்கையில் உங்களுக்கு பிரச்சனை? என்று கேட்டால் பெரிய லிஸ்ட் போடுவார்கள். பணம் சம்பாதித்தால் மட்டும் போதாது, மனதால் ஒருவர் நிம்மதியாக இருப்பது தான் உண்மையான மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகும் அல்லவா? மனம் சார்ந்த பிரச்சினைகளை ஓட ஓட விரட்டியடிக்கும் சக்தி வாய்ந்த பதிகத்தை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

1. தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன்தானே!

- Advertisement -

2. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே!

3. வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச்
சாதி யாவினை யானதானே!

- Advertisement -

4. பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்மிறையே!

5. பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன்தானே!

- Advertisement -

6. பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே!

7. புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவ மாயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன்தானே!

8. போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே!

9. மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந்தானே!

10. பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந்
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்மிறையே!

11. புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
பந்த மார்வினை பாறிடுமே!

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் பாடல்களில் இடம் பெற்றுள்ள இந்த வரிகளை காலை அல்லது மாலை வேளையில் நீங்கள் பாராயணம் செய்ய வேண்டும். செந்நிற பூக்களை கொண்டு சிவன் படத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டு பாட வேண்டும். ஒவ்வொரு முறை பாடும்பொழுதும் சிவனின் திருவடியில் பூக்களை தூவுங்கள். சிந்தை நோயை அதாவது தேவையற்ற சிந்தனைகளை எழுப்பும் மனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய அற்புதமான வரிகளை அடக்கியுள்ள இப்பதிகத்தை பாடும் பொழுது மனம் அமைதி அடையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
மீன் வறுவல் மசாலா

மனம் அமைதி பெறுவதோடு, இறைவனுடைய அருளையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய அற்புதமான திருப்பதிகம் ஆகும். அமைதியான மற்றும் சுத்தமான இடத்தில் அமர்ந்து தியான நிலையில் இந்த பதிகத்தை முழு நம்பிக்கையுடன், பக்தியுடன் பொருள் உணர்ந்து பொறுமையாக பாடுங்கள். எப்பேர்ப்பட்ட ஸ்ட்ரெஸ் அல்லது டென்ஷன் உங்களிடம் இருந்தாலும் அவை விட்டு விலகி ஓடிவிடும். வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய தைரியத்தை கொடுக்கும் சக்தி வாய்ந்த பதிகமாகும் எனவே தவிர்க்காமல் பாடி பாருங்கள்.

சற்று முன்