மனபாரம் நீங்க பரிகாரம்

manabaram
- Advertisement -

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கஷ்டம் என்பது வரும். அதேசமயம் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு வழிகள் கிடைக்கவில்லையே என்ற கவலையும் ஏற்படும். அந்த கவலையை வெளியில் கூறிவிட்டால் மனதில் இருக்கும் பாரம் விலகிவிடும். கூற முடியாத கவலைகள் இருக்கும்பொழுது அதனால் மனபாரம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட மனபாரத்தை நீக்குவதற்கு உதவக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மனதில் இருக்கும் கவலையை மனதிற்கு பிடித்த யாராவது ஒரு நபரிடம் பகிர்ந்து கொண்டால் பாரம் குறைந்தது போல் தோன்றும். இது யாரிடமும் கூற முடியாத கவலையாக இருக்கும் பொழுது அது என்றுமே நம் மனதிற்குள் பெரிய ரணத்தை உண்டு பண்ணும். இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதுதான் உண்மை. மனக்கவலையின்றி நிம்மதியாக வாழ்வதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு தேங்காய் சிவப்பு நிற கயிறு மற்றும் மஞ்சள் நிற கயிறு தேவைப்படும். நம் கையில் கட்டும் கயிறு போல மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும். பெரியதாக வாங்க வேண்டும்.

இப்பொழுது பூஜை அறையில் நம் மனதில் என்ன பாரம் இருக்கிறதோ என்ன கவலை இருக்கிறதோ என்ன நடந்தால் இந்த கவலை தீருமோ, பாரம் குறையுமோ அதை சுவாமி இடம் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இந்த இரண்டு கயிறுகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து 9 முடிச்சுகள் போட வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த முடிச்சு போட்ட கயிறை தேங்காயில் சுற்ற வேண்டும். இப்பொழுது இந்த தேங்காயை கையில் வைத்துக்கொண்டு மனதார இறைவனிடம் வழிபாடு செய்ய வேண்டும். மனக்குறை நீங்க வேண்டும், மனபாரம் அகல வேண்டும், கவலைகள் ஒழிய வேண்டும் என்று கூறி வழிபாடு செய்துவிட்டு இந்த தேங்காயை அப்படியே பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

வேண்டிய வேண்டுதல் நிறைவேறிய பிறகு, அதாவது உங்களுடைய மன குறை, மனபாரம் அகன்ற பிறகு அந்த தேங்காயை எடுத்து ஏதாவது ஒரு கோவிலில் சிதர் தேங்காயாக உடைத்து விட்டு கயிறை கோவிலில் இருக்கும் மரங்களில் வைத்து விட வேண்டும். இந்த முறையில் நம்முடைய மனக்கவலையை கூறிக் கொண்டே அந்த முடிச்சுகளை போடும் பொழுது படிப்படியாக நம்முடைய மனபாரம் குறைய ஆரம்பிக்கும். இது ஆன்மீக ரீதியாக மட்டும் அல்லாமல் மனோதத்துவ ரீதியாகவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ஏற்ற வேண்டிய தீபம்.

இந்த முறையில் பரிகாரம் செய்து நம்முடைய மனபாரத்தையும் மனக்கவலையும் நீக்கி நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வோம்.

- Advertisement -