தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ஏற்ற வேண்டிய தீபம்.

bhairavar-dheepam
- Advertisement -

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எண்ணற்ற துன்பங்களும் துயரங்களும் நிறைந்து இருக்கிறது. அதை எல்லாம் சமாளித்துக் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படி துன்பப்பட்டு வாழும் இந்த துயர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழ தெய்வ வழிபாடுகள் நமக்கு உறுதுணையாக இருக்கும்.

அந்த வகையில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் நாம் செய்யும் இந்த வழிபாடானது நம்முடைய சகலவித துன்பத்தையும் நீக்கி வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியான இந்த தீப வழிபாட்டை நம் எப்படி செய்யலாம் எங்கு செய்யலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

துன்பம் தீர கால பைரவர் வழிபாடு

ஒவ்வொருவர் வாழ்க்கையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் தெரியும் இத்தனை துயரத்தில் அவர்கள் எப்படித் தான் வாழ்கிறார்களோ என்று மலைத்து விடுவோம். அந்த அளவிற்கு இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்றி கூடிய ஒரு அற்புதமான தெய்வம் எனில் காலபைரவர் தான். அவரை நாளையும் தேய்பிறை அஷ்டமியில் நம் வீட்டில் எளிமையாக இப்படி வழிபடும் பொழுது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் அது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த வழிபாட்டை தொடங்குவதற்கு நாளை காலை பிரம்ம முகூர்த்த வேளையிலே எழுந்து குளித்து முடித்து விரதத்தை தொடங்கி விட வேண்டும். நாளைய தினம் அசைவத்தை அறவே தவிர்த்து விட வேண்டும். அது மட்டும் இன்றி உண்ணாமல் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது. உடல் நல கோளாறு உள்ளவர்கள் அல்லது இப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் இரவு உணவாவது தவிர்க்க பாருங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்ய காலபைரவரின் புகைப்படம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை சிவலிங்கமும் அல்லது சிவபெருமானின் புகைப்படமும் இருந்தாலே போதும். ஏனெனில் கால பைரவரே சிவபெருமானின் மறு உருவம் தான். தெய்வ வழிபாட்டிற்கு 9 அகலை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஏற்கனவே நாம் பயன்படுத்திய அகலாகவும் இருக்கலாம்.

அதே போல் நாளை இந்த தீபத்தை ராகுகால நேரத்தில் ஏற்றுவது தான் சிறந்தது நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை ராகு காலம். இந்த நேரத்தில் உங்கள் பூஜை அறையில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக 9 அகல் தீபத்தை கிழக்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் இருப்பது போல வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் 8 அகல் விளக்கில் நல்லெண்ணெயும் ஒரே ஒரு அகல்விளக்கில் நெய்யும் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த வழிபாட்டின் போது சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைக்கலாம். தாமரை மலர் கொண்டு வணங்குவது இன்னும் சிறந்தது. ஒரு வேளை உங்களால் இந்த நேரத்தில் ஏற்ற முடியவில்லை எனில் மாலை 6.30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக ஏற்றலாம்.

இந்த தீபத்தை ஏற்றிய பிறகு நீங்கள் தீபத்தின் முன்பாக அமர்ந்து ஓம் பைரவாய நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த ஒரு வழிபாட்டை நாளை பிறை அஷ்டமியில் காலபைரவரை நினைத்து செய்யும் பொழுது உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படைக்கலாமே: நல்ல வேலை கிடைக்க மந்திர வார்த்தைகள்

மனிதன் தோல்வி அடைந்து சோர்வுற்ற நிலையில் கடைசியில் சரணடைவது தெய்வத்தின் பாதத்தில் தான். அப்படி சரணடையும் போது நம் சூழ்ந்திருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் இருந்து உடனடியாக காக்கக்கூடிய ஆற்றல் பெற்ற தெய்வமாக இருப்பவர் இந்த கால பைரவர். நாளைய தினத்தில் இவரை இந்த முறையில் வழிபட்டு துன்பமில்லா வாழ்க்கையை வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -