மனக்கவலை தீர மந்திரம்

Gopuram-1

ஒரு மனிதனுக்கு மனம் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இன்றைய அவசர யுகத்தில் பலவிதமான காரணங்களால் நம் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு அமைதியற்ற சூழலை எதிர்கொள்கிறது. இதனால் கவலைகளும், சிந்தனைத் தெளிவற்ற நிலையும் பெரும்பாலானோர்க்கு ஏற்படுகிறது. அப்படியானவர்களுக்கு அப்பாதகங்களை நீக்கி மனநிலையை மேம்படுத்த உதவும் சந்திர பகவான் மந்திரம்.

chandra bagavan

மந்திரம்:
“ஓம் ஷராம் ஷ்ரீம் ஷுராவும்
சஹ் சந்திராய நமஹ”

இந்த மந்திரத்தை வளர்பிறைக்காலங்களில் வரும் திங்கட்கிழமைகளில், காலையிலோ அல்லது மாலையிலோ கோவிலில் உள்ள சந்திர பகவான் சந்நிதியில் வெண்தாமரை, அல்லி, மல்லி போன்ற பூக்களில் ஏதேனும் ஒன்றை சந்திர பகவானுக்கு சாற்றி, நெய்தீபம் ஏற்றி, சிறிது கற்கண்டுகளை நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை உருஜெபித்து வர உங்கள் மனதில் இருந்த ஒரு நிம்மதியற்ற நிலை நீங்கும். உங்கள் சித்தம் தெளிவுபெற்று நீங்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
குழந்தை பாக்கியம் பெற உதவும் எளிய பரிகார மந்திரம்

English Overview:
Here we have Lord chandra baghavan mantra in Tamil. This Mantra help us to relax our mind and it will destroy all our sorrows.