வேர்க்கடலையில் குழம்பு செய்திருக்கிறீர்களா? 1/2 கப் வேர்க்கடலை இருந்தால் போதும், சூப்பரான குழம்பு ரெடி! நீங்களும் செஞ்சு பாருங்க.

verkadalai-kulambu1
- Advertisement -

வேர்க்கடலை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொருள் ஆகும். இதை வைத்து பல விதங்களில் நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழம்பு செய்து சாப்பிட்டு இருப்போமா? என்று கேட்டால் மிகவும் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் தான் ‘ஆம்’ என்று சொல்ல நேரிடும். சுவையான வேர்க்கடலை குழம்பு நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க, இனி அடிக்கடி செய்வீங்க! ருசியான வேர்க்கடலை குழம்பு எளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

வேர்க்கடலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – அரை கப், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், சாம்பார் தூள் – 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, அரைக்க: மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு பல் – 2, தேங்காய் துருவல் – கால் கப்.

- Advertisement -

வேர்க்கடலை குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் அரை கப் அளவிற்கு வேர்க்கடலையை தோலுடன் அப்படியே மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். வேர்க்கடலை உடையாத அளவிற்கு நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அரைக்க தேவையான பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மிளகு, சீரகம், பூண்டு பல், தேங்காய் துண்டுகள் சேர்த்து நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வரும் பொழுது, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை நன்கு வதங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம், தக்காளி மசிய வதங்குவதற்கு கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கொஞ்சம் சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றின் மசாலா வாசனை போக நன்கு வதக்கிய பிறகு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் ஊற வைத்துள்ள நெல்லிக்காய் அளவிற்கு புளியை நன்கு கரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பு கொதிக்கும் வரை காத்திருங்கள்.

நன்கு கொதிக்கும் பொழுது நீங்கள் வேக வைத்துள்ள கடலையை தேவையான அளவிற்கு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்துள்ள மசாலா கலவையையும் இப்போது சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். கடலை அவித்த தண்ணீர், மசாலா கலவை, புளி கரைசல் ஆகியவற்றுடன் நீங்கள் அதிகமாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை, குழம்பு கெட்டியானதும் நறுக்கிய மல்லித்தழை தூவி சுட சுட சூடான சாதத்துடன் பரிமாற, அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -