- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனக்குறை நீங்க வாராகி வழிபாடு

மனக்குறை நீங்க வாராகி வழிபாடு

- Advertisement -

நாளை 12-05-2024 சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி. சித்திரை மாதம் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய இந்த பஞ்சமி திதியானது மிகவும் விசேஷமான திதியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த விசேஷமான பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய மனக்குறை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் தங்களுடைய மனதிற்குள் ஏதாவது ஒரு குறை ஒன்று இருக்கத்தான் செய்யும். அந்த குறையை யாரிடமும் சொல்ல முடியாமல் தங்களுக்குள்ளேயே போட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி பல கஷ்டங்களை சந்தித்து கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்னும் அடிப்படையில் நாளைய தினம் உங்களுடைய மன குறைகள் அனைத்தையும் நீக்கி நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை அருளுவதற்கு வராகி அம்மனை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை பலரும் வழிபடுவோம். தங்கள் வீட்டிலேயே வாராகி அம்மனின் படத்தை வைத்து வழிபடும் நபர்களும் இருக்கிறார்கள். வீட்டில் படம் வைக்காமல் கோவிலுக்கு சென்று வழிபடும் நபர்களும் இருக்கிறார்கள். உக்கிர தெய்வமாக இருந்தாலும் முறையாக அந்த அம்மனை நாம் வழிபட்டு வணங்கினோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் அற்புத தெய்வமாக தான் வராகி அம்மன் திகழ்கிறார்.

நாளைய தினம் வராகி அம்மனை வழிபடுபவர்கள் தங்கள் இல்லத்தில் வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி சரிசமமாக ஒரு தேங்காயை உடைத்து அந்த தேங்காயில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட்டு அந்த பச்சரிசியின் மேல் வைக்க வேண்டும். பிறகு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் இவை மூன்றையும் சரிசமமாக கலந்து இந்த தேங்காய்க்குள் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வீட்டில் தேங்காய் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்று நினைப்பவர்கள் புதிதாக வாங்கிய ஐந்து அகல் விளக்குகளை வைத்து மேல் சொன்ன எண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வராகி அம்மனுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு வராகி அம்மனுக்கு பிடித்தமான உளுந்தால் செய்யப்பட்ட இனிப்பு பொருளையும், பானகத்தையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

பிறகு அம்மனுக்கு ஏற்றிய தீபத்தின் முன்னால் அமர்ந்து “ஓம் வஜ்ரவாராகியே நமஹ* என்னும் மந்திரத்தை 108 முறை மனதார உச்சரித்து மல்லிகை பூக்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மணக்குறை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முழு தானியத்தை ஒரு கிலோ வாங்கி வந்து வாராகி அம்மனுக்கு முன்பாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு கையில் சிறிது மரிக்கொழுந்தை வைத்து உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை மனதார வேண்டி அந்த மரிக்கொழுந்தை வராகி அம்மனின் பாதத்தில் சமர்ப்பித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். முழு தானியத்தை வைத்திருந்தோம் அல்லவா அந்த தானியத்தை பூஜை நிறைவடைந்த பிறகு எடுத்து பிறருக்கு தானமாக வழங்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் நம்முடைய மனக்குறை மட்டுமல்லாமல் ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமண தடைக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும் விரைவில் திருமண தடை விலகும். அதோடு மட்டுமல்லாமல் நாம் நியாயமாக வேண்டிய வேண்டுதல் கண்டிப்பான முறையில் விரைவிலேயே நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: சாபத்திலிருந்து விடுபட பரிகாரம்

முழு மனதுடன் வாராஹி அம்மனை நினைத்து மனதார வழிபடுபவர்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களும் விலகி நன்மைகள் உண்டாகும்.

சற்று முன்