- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமனம் தளறும்போது செய்ய வேண்டிய சிவன் வழிபாடு

மனம் தளறும்போது செய்ய வேண்டிய சிவன் வழிபாடு

- Advertisement -

இன்று வாழ்க்கையில், இரண்டு மடங்கு சந்தோஷம் நம்மை தேடி வருகிறது என்றால், அடுத்தபடியாக நான்கு மடங்கு கஷ்டம் நமக்கு வரப் போகிறது என்று அர்த்தம். அடுத்தபடியாக நான்கு மடங்கு துன்பத்தை அனுபவித்தால், அதற்கும் மேலான இன்பத்தை கடவுள் கொடுக்கப் போகின்றான் என்று அர்த்தம். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை.

துன்பம் வரும்போது துவண்டு போய் உட்கார்ந்து விட்டால், துன்பத்திலிருந்து வெளிவர வழி கிடைக்காது. துன்பம் வரும்போது ஈசனின் காலை இருக்க பற்றிக்கொள்ளுங்கள், ஈசன் உங்களை நிச்சயம் தனியாக தவிக்க விடமாட்டான். ஏனென்றால் ஈசனது காலை நீங்கள் இறுக்கமாக பற்றி கொண்டிருக்கிறீர்கள்.

- Advertisement -

நீங்கள் விழுந்தால் உங்களுடன் சேர்ந்து விழப் போவது அந்த ஈசன்தான். இதனால்தான் துக்கம் வரும்போது இறைவனின் திருவடிகளை இறுக்கப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்தே நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

துன்பம் வரும்போது மனம் தளராமல் இருக்க சொல்ல வேண்டிய தேவாரத்தின் பாடல் வரிகள் தான் இது. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் வரிகள். மனம் தளறும்போது, துன்பம் வரும்போது, என்ன செய்வது என்றே புரியாத சமயத்தில் ஈசனை நினைத்துக் கொண்டு இந்த நான்கு வரியை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள். கஷ்டம் வந்த வழி தெரியாமல் திரும்ப செல்லும். அந்த நான்கு வரி என்ன. அந்த நான்கு வரிகளுக்கு உண்டான அர்த்தம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மனம் தளராமல் பிரச்சனைகளை எதிர் கொள்ள தேவாரத்தில் இருந்து பாடல் வரிகள்

வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!

நான் வாழ்ந்தாலும் சரி, செத்தாலும் சரி, கஷ்டப்பட்டாலும் சரி, விழுந்தாலும் சரி உன்னுடைய காலை விடவே மாட்டேன். இருண்டு போன என்னுடைய அறிவை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். மனம் தளர்ந்து போய் சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் என்னுடைய குழப்பத்திற்கு தெளிவு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

அதற்கு உன்னை விட்டால் எனக்கு வேறு கதியே கிடையாது என்று சரணடைந்து, ஈசனின் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். இந்த நான்கு வரி பாடலை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்க உங்க கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறந்து விடும். கஷ்டம் வரும்போது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற இடத்திலிருந்து ஈசனை கூப்பிட்டு இந்த பாடலை படிக்கலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க லட்சுமி கடாட்சம் ஏற்பட பரிகாரம்

இந்த பிரபஞ்சமே சிவனால் உருவாக்கப்பட்டது தான். சிவன் இல்லையே இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. சிவன் அடியார்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். துன்பம் வரும்போது சிவபெருமான் உங்களுடனே இருக்க வேண்டும் என்றால் இந்த பாடலும் உங்களுடனே இருக்கட்டும். ஈசனின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். துன்பங்களும் தீர வேண்டும் என்ற பிரார்த்தனையை ஈசனிடம் வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்