மசாலா அரைச்சு போட்ட மாங்காய் தேங்காய் சாதம் இப்படி கூட செய்யலாமா? இப்படி ஒரு அல்டிமேட் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது மிஸ் பண்ணிடாதீங்க.

mangai-rice
- Advertisement -

தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுப்பதற்கு வித விதமான ரெசிபிகளை தேட வேண்டிய வேலை இல்லத்தரசிகளுக்கு உண்டு. சூப்பராக சட்டுன செய்யக்கூடிய ஒரு மாங்காய் தேங்காய் சாதத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் ருசியாக எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி இன்று இந்த பதிவில் உங்களுக்காக. லஞ்ச் பாக்ஸுக்கு இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தொட்டுக் கொள்ள ஒரு வத்தல், சிப்ஸ் கொடுத்தால் கூட போதும். தேவை என்பவர்கள் ஒரு முட்டையை அவித்துக் இது கூட வைத்து விடலாம். நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்ட மாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக வந்துவிட்டது.

செய்முறை

முதலில் 1 கப் அளவு சாதத்தை உதிரி உதிரியாக கொஞ்சம் உப்பு போட்டு வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசி, சாப்பாட்டு அரிசி, சீரக சம்பா அரிசி, எந்த அரிசியை வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். ஏன் காலை வைத்த சாதம் ராத்திரி மீதம் இருந்தால் அதில் கூட இந்த வெரைட்டி ரைஸ் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம். அடுத்து ஒரு மாங்காவை எடுத்து தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நறுக்கிய மாங்காய் – 1 கப், தேங்காய் துருவல் – 1 கப், பச்சை மிளகாய் – 3 லிருந்து 4, கருவாப்பிள்ளை – 2 கொத்து, புதினா தழைகள் – 1/2 கைப்பிடி, மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். தண்ணீர் ஊற்றக்கூடாது. லேசாக கொரகொரப்பாக தான் இது அரைபடும். அரைத்த இந்த மசாலாவை அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன், போட்டு முந்திரி பருப்பு – 10 போட்டு, பொன்னிறமாக எல்லா பொருட்களையும் வறுக்க வேண்டும். வரமிளகாய் – 2 கிள்ளி போடவும், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை எண்ணெயில் போட்டு மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு – உப்புத்தூள், தூவி ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும்.

- Advertisement -

மசாலாவின் பச்சை வாடை போகவேண்டும். தேங்காய், மாங்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி தழையை எல்லாம் பச்சையாக தான் அரைத்து இருக்கின்றோம். அதில் பச்சை வாடை நீங்க எண்ணெயில் வதக்கி, இறுதியாக உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை இந்த மசாலாவோடு போட்டு, அரிசி உடையாமல் மெதுவாக கலந்து விடுங்கள். மசாலா எல்லா சாதத்திலும் படும்படி கிளறிவிட்டு சாதம் நன்றாக சூடானதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாரம்பரிய சுவையில் செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி? சட்டுன்னு இதை காலை உணவாக கூட செய்யலாம்.

ஐந்து நிமிடம் மசாலாவில் சாதம் ஊறியதும் சுவைத்து பாருங்கள். உங்களுக்கே இதன் ருசி ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுடச்சுட சாப்பிட்டாலும் உங்கள் சகோதரியும். லஞ்ச் பாக்ஸ்க்கு கட்டிக் கொடுத்தாலும் உங்கள் சவுகரியம். காலை நேரத்தில் ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடிய ரெசிபி இது. மிஸ் பண்ணாம ரெசிபி செஞ்சு பாருங்க. உப்பு காரம் புளிப்பு என்று எல்லா சுவையும் இதில் அடங்கி இருக்கும்.

- Advertisement -