இந்த மங்களப் பொருட்களை இப்படி தவறவிட்டால் தீராத துன்பங்கள் வந்து சேரும்

lakshmi
- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த பொருட்களை தான் மங்களப் பொருட்கள் என்று சொல்கிறோம். வீட்டில் பூஜை செய்யும் பொழுதும், கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பொழுதும் அதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே மங்களகரமான பொருட்கள் ஆகும். அவ்வாறு அனைத்து சுபகாரியங்களுக்கும் இப்படி மங்களப் பொருட்கள் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அவ்வாறு வெற்றிலை, பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், பன்னீர் இவ்வாறு பல பொருட்கள் இருக்கின்றன. இந்த பொருட்களை பூஜைக்காக பயன்படுத்திய பிறகு இவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நமக்கான அதிர்ஷ்டமும், நன்மையும் அமைகிறது. இந்த பொருட்களை கவனமாக கையாளாமல் விட்டு விட்டால் இதன் மூலம் நாம் எதிர்கொள்ள முடியாத பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அவ்வாறு எந்தெந்த பொருட்களை எப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்வது அனைவரது வீட்டிலும் தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு வழக்கமான விஷயம் ஆகும். காலையில் எழுந்து அவசர அவசரமாக வேலைகளை முடித்து அதே அவசரத்துடன் பூஜையையும் செய்ய கூடாது. வேலைகளை முடித்த பிறகு நிதானமாக பூஜை அறைக்கு வந்து பூஜைக்கான வேலைகளை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதேபோல் பூஜை செய்து முடித்த பிறகு பூஜை செய்த இடத்தை உடனே சுத்தம் செய்யக் கூடாது. அது மட்டுமல்லாமல் பூஜையில் பயன்படுத்திய பூக்களை உடனே களைத்து விடக்கூடாது. அத்துடன் பூஜைக்காக வைக்கப்பட்ட பிரசாதத்தையும் உடனே மற்றவருக்கு கொடுத்து விடக் கூடாது. அது சிறிது நேரம் அப்படியே இருக்க வேண்டும். பூஜை செய்த அந்த இடமும் கலையாமல் அப்படியே இருக்க வேண்டும்.

அதேபோல் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு கொடுக்கப்படும் மஞ்சள், குங்கும பிரசாதத்தை கீழே கொட்டிவிடக் கூடாது. இவ்வாறு அவற்றைக் கீழே தவற விடும் பொழுது மற்றவர்களின் கால் பாதத்தில் மிதிபடும். இதனால் நமக்கு தான் பெரும் துயரம் உண்டாகும். இந்த பிரசாதத்தை அங்கேயே ஓரமாக வைத்துவிட்டும் வரக்கூடாது. அதனை கவனமாக கையில் எடுத்து வர வேண்டும்.

- Advertisement -

பிறகு இறைவனுக்கு பூஜை செய்த மலர்களை மற்றவர்களின் பாதத்தில் மிதி படும் அளவிற்கு விட்டு விடக்கூடாது. இறைவனுக்கு படைக்கப்பட்ட அனைத்து பொருட்களும் மிகவும் புனிதமானவை. இவற்றை கவனமாக பயன்படுத்தாமல் விட்டு விட்டால் நமது வாழ்வில் தீராத துன்பத்திற்கு ஆளாகி விடுவோம்.

எனவே பூஜை செய்வதோடு மட்டுமல்லாமல் பூஜைக்குப் பயன்படுத்திய பொருட்களையும் கவனமாக உபயோகப்படுத்த வேண்டும். பூஜை செய்வதால் உண்டாகும் பலனை இப்படி பூஜை செய்த பொருட்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் நீங்கள் செய்த பூஜைகள் அனைத்தும் பலன் இல்லாமல் போய்விடும்.

- Advertisement -