மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? அந்த மாங்கல்ய தோஷத்தைப் போக்கி, தீர்க்க சுமங்கலி வரத்தைப் பெற, பெண்கள் செய்ய வேண்டிய சுலபமான ஒரு பரிகாரம்.

amman-mangalyam

இந்த பூலோகத்தில் பெண்ணாக பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்குமே கடைசி வரை சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும். திருமணமான பின்பு ஒரு ஆணின் வாழ்க்கையை, நிர்ணயிப்பது பெண்கள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் கயிறு தான். அந்த திருமாங்கல்யதிற்கு, அத்தனை சக்தி உண்டு என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து, நல்ல நாள் பார்த்து, கிழமை பார்த்து, முகூர்த்த நேரம் பார்த்து தான் திருமணம் நடத்தப்படுகின்றது. ஆனாலும் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். இது எதனால் வருகிறது? பெண்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய மாங்கல்ய தோஷத்தாலும் குடும்பத்தில் பிரச்சினை வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

mangalyam1

அப்போது குடும்பத்தில் பிரச்சினை வந்தால், அதற்கு ஆண்கள் காரணம் இல்லையா? ஆண்களுடைய ஜாதககட்டம் காரணம் இல்லையா? என்ற விதண்டா வாதத்திற்கு நாம் செல்ல வேண்டாம். சில பெண்களின் ஜாதகத்தில் இருக்கக்கூடிய மாங்கல்ய தோஷத்தை எப்படி நிவர்த்தி செய்வது, என்பதற்கான பரிகாரத்தை பற்றித்தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அதாவது சில பேருக்கு திருமணம் ஆகி, சில நாட்களிலேயே விவாகரத்து நடந்து, கணவன் மனைவி பிரிவு, ஏற்பட்டிருக்கும். சிலருக்கோ திருமணமான சில நாட்களிலேயே, கணவனை விட்டு மனைவி இறக்க நேர்ந்திருக்கும், மனைவியை விட்டு கணவர் இருக்க நேர்ந்திருக்கும். அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்தோஷம் இல்லாமல் இருக்கும். இப்படியாக பல இன்னல்கள் ஜாதக ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

திருமணம் நடப்பதற்கு முன்பாகவே, இப்படிப்பட்ட தோஷங்கள் உள்ளது என்றால் பரிகாரங்கள் செய்து சரிசெய்து விடலாம். என்ன செய்வது ஜாதகத்தில் உள்ள தோஷத்தை பார்க்காமல் திருமணமாகிவிட்டது. திருமணத்திற்குப் பின்பு உங்களுக்கு தோஷம் இருப்பதாக உங்களது ஜோசியர் சொல்லி விட்டார். மனக் கஷ்டம், மன குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இந்த மாங்கல்ய தோஷத்தை எப்படி நாம் சரி செய்யலாம்? உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக முன்கூட்டியே தெரிந்திருந்தால், விளைவுகள் உண்டாவதற்கு முன்பு, அந்த தேசத்தின் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்வது?

- Advertisement -

திருமணமான பெண்கள் தசமி திதி அன்று, காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதிகாலை வேளையிலேயே கண் விழித்து, சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான பசும்பாலை எடுத்துக் கொண்டு, அதில் உங்களது மாங்கல்யத்தை நனைக்க வேண்டும். அதாவது மாங்கல்ய குண்டுகளை நினைக்க வேண்டும்.

milk

திருமாங்கல்யத்தை உங்கள் கழுத்தில் இருந்து கழட்ட வேண்டாம். உங்களது நெஞ்சுக்கு நேரே அந்த சிறிய பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். உங்களது மாங்கல்ய குண்டுகளை அதில் நினைத்து, பால் நிறைந்த அந்தப் பாத்திரத்தினுள் உங்களது திருமாங்கல்யம் மூழ்கிய பின்பு, அதன் மேல் உங்களது உள்ளங்கைகளை வைத்து அம்பாளை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, உங்களுடைய மாங்கல்ய தோஷம் விலக வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள்.

mangalyam1

அதன் பின்பு, உங்கள் அருகே எரிந்து கொண்டிருக்கும் வாசனை மிகுந்த ஊதுவத்தியில் உங்களது மாங்கல்யத்தை காட்டிவிட்டு, அம்பாளை வேண்டிக் கொண்டாலே போதும். மாங்கல்ய தோஷத்தால் உண்டாகக் கூடிய பிரச்சனைகளின் மூலம் உங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது மட்டும் உறுதி. அதன் பின்பு திருமங்கலத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

vetrilai-pakku-pazham

அன்றைய தசமி திதி தினத்தன்றே உங்களால் முடிந்த தானங்களை 3 சுமங்கலிப் பெண்களுக்கு மன நிறைவாக கொடுக்க வேண்டும். வெற்றிலைப் பாக்கு பூ பழம் மஞ்சள் குங்குமம் ரவிக்கைத்துணி புடவை உங்கள் சக்திக்கு எது முடியுமோ அதைக் கொடுக்கலாம். கூடவே மஞ்சள் கயிறும் சேர்த்து தானமாக வழங்குவது சிறப்பு. மாதம் வரும் தசமி திதியன்று இப்படி செய்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.