பணத்தை இடது கையில் தொட்டால், நம்மை துரதிஷ்டம் வந்து தொற்றிக் கொள்ளுமா என்ன?

cash

அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் இந்த இரண்டுக்குமிடையே நம்முடைய வாழ்க்கை சிக்கிக் கொண்டு தவிக்கின்றது அல்லவா? ஒருவர் கண்களுக்கு, மற்றவரை காணும்போது, ‘தான் துரதிர்ஷ்டசாலி ஆகவும், அடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலியாகவும் தோன்றும்’. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லுவார்கள் அல்லவா! அது போல் தான். எல்லோருக்கும் கஷ்டம் இருக்கும். இருந்தாலும் அடுத்தவர்களை பார்க்கும் போது இந்த மாதிரி வாழ்க்கையை நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் தான். இந்த ஏயக்கம் பெரும்பாலும் பணத்தை வைத்து தான் கணக்கிடப்படுகின்றது. மன அமைதியை இந்த உலகம் பார்ப்பதே கிடையாது.

money

சரி, பணம் காசு சேராமல் போவதற்கு இந்த துரதிர்ஷ்டம் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. நம்மிடம் துரதிர்ஷ்டம் வந்து தங்குவதற்கு பணத்தை நம் இடது கையில் தொடுவது ஒரு காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகத்திற்கான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிலர் அடிக்கடி சொல்லுவார்கள். இடது கையில் பணத்தை கொடுக்காதே! இடது கையில் பணத்தை வாங்காதே! நல்ல விஷயத்திற்கு இடது கையை பயன்படுத்தக்கூடாது. வலது கையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று!

கொஞ்சம் சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றுவார்கள். கொஞ்சம் விதண்டாவாதம் பேசுபவர்கள் என்றால், ‘இடதுகை வேண்டாம் என்றால் வெட்டி விடலாமா?’ என்று கூட கேட்பார்கள்! சரி, நாம் விதண்டாவாதம் செய்யப் போவதில்லை. நாம் பணத்தை எண்ணும் போது, இடது கையின் துணையில்லாமல் கட்டாயம் எண்ண முடியாது.

money

ஏதாவது ஒரு சூழ்நிலையில் இடதுகை நிச்சயம் பணத்தின் மேல் பட்டு தான் செய்யும். நாமெல்லாம் நினைப்பது போல இடது கையில் பணம் படுவதன் மூலம் கண்ணுக்கு தெரியாத ஒரு தோஷம் ஏற்படுவதாக சில சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த தோஷம் பணத்தை தாக்கும் போது, நிச்சயம் நம் கைகளுக்கு வரும் பணம் நிலையாக நம்மிடம் தங்காமல் போகவும் சில வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்காக இடது கையை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு பரிகாரத்தை நம் முன்னோர்கள் சொல்லி வைத்து உள்ளார்கள். அந்த வகையில் இதற்கான பரிகாரத்தையும் நாம் தெரிந்து கொள்வோம். இடது கையில் பணத்தை வைப்பதற்கு முன்பாக, உங்களது இடது கையின் அருகில் உங்கள் முகத்தை கொண்டு சென்றோ, அல்லது உங்களது கையை உங்கள் முகத்திற்கு நேராக கொண்டு வந்தோ ‘ஓம் ஓம் ஓம்’ என்றவாறு மூன்று முறை உச்சரிக்க வேண்டும். கையின் அருகில், உங்க வாயால் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அவ்வளவு தான்.

om-mantra

அதன் பின்பாக பணத்தை இடது கையில் வையுங்கள். அதன் பின்பு எண்ணங்கள். அதன் பின்பு பீரோவில் எடுத்து வைக்கும் போதும் இரண்டு கைகளால் மரியாதை கொடுத்த பணத்தை வைக்கலாம். அப்போதும் ‘ஓம் ஓம் ஓம்’ என்று சொல்லிக் கொண்டு வைத்து பாருங்கள். இப்படி செய்தால் இடது கையில் பணத்தை தொட்டாலும், அல்லது வேறு ஏதாவது தோஷம் அந்த பணத்திற்கு இருந்தாலும், நமக்கு எந்த தோஷமும் ஏற்படாது என்று சொல்கிறது சாஸ்திரம். நம்பியவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நம்பாதவர்களுக்கு சாஸ்திரங்களும் இல்லை சம்பிரதாயங்களும் இல்லை என்ற கணக்கை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கடவுளை இப்படி தரிசனம் செய்வது, நமக்குப் பாவத்தை தான் சேர்க்கும். கடவுளை எப்படி தரிசனம் செய்ய கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.