உங்களுடைய வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்திருக்க, மஞ்சள் கிழங்கை எப்போதும் இந்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

manjal

மஞ்சள், இது ஒரு மங்களகரமான பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அது மட்டுமல்லாமல் நம்மை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கிருமி நாசினியும் கூட. இந்த மஞ்சள் கிழங்கு ஒரு வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். வீட்டில் உப்பு எப்படி சுத்தமாக தீரக் கூடாதோ, அதேபோல் தான் மஞ்சளும் சுத்தமாக தீர்ந்து போகக்கூடாது. பூஜை அறையில் இருக்கும் மஞ்சள் டப்பாவும் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். சமையலறையிலும் மஞ்சள் டப்பா நிரம்பியிருக்க வேண்டும்.

manjal1

சில சமயம் இந்த மஞ்சள் பொடியில் வண்டு வரத்தொடங்கும். பூஜை அறையில் இருக்கும் மஞ்சள் டப்பாவில் ஒரு கற்பூர துண்டையும் (சுவாமிக்கு ஏற்றும் சாதாரண சூடம்), சமையலறையில் இருக்கும் மஞ்சளில் ஒரு லவங்கமும் போட்டு வையுங்கள். அப்போது அந்த மஞ்சள் சீக்கிரம் வண்டு பிடிக்காது. காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி கொள்ள வேண்டும்.

சரி, நம்முடைய வீட்டில் உள்ள உறுப்பினர்களுன்னுடைய மனது எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும், அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தாலும் அது எளிதில் தீர வேண்டும் என்றால், நம்முடைய குடும்பம் எப்போதுமே ஒரு பாதுகாப்பு கட்டத்தில் இருக்க வேண்டுமென்றால், ஒரு வீட்டில் மஞ்சள் கிழங்கை எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும், என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

virali-manjal

இந்த பரிகாரத்திற்க்கு மஞ்சள் கிழங்கு, விரலி மஞ்சள் இந்த இரண்டையும் பயன்படுத்தலாம். தவறு ஒன்றும் கிடையாது. உடையாத விரலிமஞ்சள் ஆக இருக்கட்டும். இரண்டு வகையான மஞ்சளில் ஏதாவது ஒரு வகையான மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சதுர வடிவில் இருக்கும் மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது கூட காட்டன் வெள்ளை துணியை மஞ்சள் தண்ணீரில் நனைத்து உலர வைத்து துணையாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அந்த மஞ்சள் துணியில் ஏழு மஞ்சள் கிழங்கை வைத்து மஞ்சள் நிற நூல் கொண்டு மூன்று முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தென்மேற்கு பகுதியில் வைக்கும் இடவசதி இருந்தால் அந்த இடத்தில் இந்த முடிச்சை வையுங்கள். அப்படி இல்லை என்றால் வடமேற்கு பகுதியில் இந்த முடிச்சு வடமேற்கு பகுதியில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு வீட்டில் இந்த இரண்டு திசையிலும் மங்களகரமான இந்த மஞ்சள் இருக்கின்றதோ, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் தங்காது. ஆக வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு பெரிய பிரச்சினை எதுவும் வராது. அப்படியே வந்தாலும் நிச்சயம் அந்த பிரச்சனையிலிருந்து, அந்த வீட்டில் இருப்பவர்கள் சீக்கிரமே விடுபட்டு விடுவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது.

kitchen2

அடுத்தபடியாக ஒருவருடைய வீட்டு சமையலறையும் பூஜை அறைக்கு நிகரானது தான். நம்முடைய வம்சத்தில் தன தானியதிற்க்கு பஞ்சம் வரக்கூடாது. நம்முடைய ஆரோக்கியம் எந்தவிதத்திலும் கெட்டுப் போகக் கூடாது. நாம் சாப்பிடும் சாப்பாடு ஆரோக்கியமானதாகும், அந்த சாப்பாட்டில் உள்ள சத்து முழுமையாக நம் உடலில் சேர வேண்டும் என்றாலும், இறை ஆற்றல் நிச்சயம் நமக்கு தேவை.

manjal-mudichu

இதற்காக ஒரு ஏழு மஞ்சள் கிழங்கை மஞ்சள் துணியில் முடி போட்டு, அரிசி பானைக்கு அடியில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அரிசி மூட்டையாக இருந்தாலும் அதற்கு அடியில் இந்த மஞ்சள் முடிச்சை வைத்துக் கொள்ளலாம். அரிசி டப்பாவிற்கு கீழேயும் வைத்தாலும் சரி, அரிசி உள்ளே புதைத்து வைத்தாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம். இந்த முடிச்சை கட்டும் போதும் அதனுள்ளே ஒரு லவங்கத்தை வைத்து கட்டலாம். தவறொன்றும் கிடையாது. மஞ்சள் சீக்கிரம் வண்டு பிடிக்காது. ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ ஒரு வருடத்திற்கு ஒரு முறையோ இந்த மஞ்சள் கிழங்கை நீர்நிலைகளில் செலுத்திவிட்டு மஞ்சளை புது வைத்து கட்டி மீண்டும் அந்த இடத்தில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து இப்படி செய்து வருபவர்களுடைய வீட்டில், வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. உங்க வீட்டில் பண மழை பொழிவதற்கு 100% கேரண்டீ.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.