மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து இப்படி செய்து வருபவர்களுடைய வீட்டில், வறுமை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. உங்க வீட்டில் பண மழை பொழிவதற்கு 100% கேரண்டீ.

lakshmi-cash

நாமும் நம்முடைய சந்ததியினரும் வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் மகாலட்சுமியிடம் கேட்கும் ஒரு வராக இருந்து வருகிறது. அந்த மகாலட்சுமி நமக்கு அருளாசியை முழுமையாக வழங்க வேண்டும் என்றால், அந்த மகாலட்சுமியின் மனதில் நாம் எப்படி இடம் பிடிப்பது? விஷ்ணு பகவானின், மனதில் மகாலட்சுமி நீங்காத இடத்தை பிடித்திருப்பது போல, நாமும் மஹாலக்ஷ்மியின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதற்கான வழிபாட்டு முறையை தான் இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமி வழிபாடு என்றால், அதில் முதலிடம் துளசி செடிக்கு தான். அந்த மகாலட்சுமியே துளசி செடியில் வாசம் செய்வதாக ஐதீகம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த துளசி செடியை எவர் ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து, பிரம்ம முகூர்த்த வேளையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாகவே 6 மணிக்கு முன்பு, காலை 5.30 மணி அளவில் தினந்தோறும் பூஜை செய்து வருகிறார்களோ அவர்களுடைய வீட்டில் நிச்சயமா லட்சுமிதேவி நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

தினம்தோறும் இந்த பூஜையை செய்ய முடியாதவர்கள் கூட,  வெள்ளிக் கிழமைகளில், செவ்வாய் கிழமைகளிலும் தவறாமல் துளசி செடியை வழிபட வேண்டும். துளசி செடிக்கு முன்பாக ஒரு மண் அகல் தீபத்தில் நெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கட்டாயம் துளசி செடிக்கு முன்பாக அரிசி மாவில்தான் கோலம் போட வேண்டும்.

Venthayam

இதோடு சேர்த்து சுக்கிரனின் அம்சம் நிறைந்த வெந்தயத்தை ஒரு பச்சை துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி, அந்த துளசி செடியின் முன்பாக வைத்து மகாலட்சுமியையும் மனதார வேண்டி உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டம் நிரந்தரமாக நீக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

துளசி தாயாருக்கும் முன்பு பிரம்ம முகூர்த்த நேரத்தில் வைத்து வழிபட்ட இந்த முடிச்சினை, உங்கள் வீட்டில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு பாருங்கள். உங்களுடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாகக் குறைந்து, விரயங்கள் குறைந்து அதிகப்படியான தங்க நகைகள் வாங்கும் யோகம் வந்து, உங்களுடைய வாழ்க்கையே அற்புதமாக மாறிவிடும். ஒரே ஒரு வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்து, பச்சை நிறத் துணியை வெந்தயத்தோடு, பணப்பெட்டியில் வைத்து விட்டால் மட்டும் போதாது. தொடர்ந்து வெள்ளி செவ்வாய்களில் துளசி தாயாரை வழிபட்டு கொண்டே வர வேண்டும்.

thulasi

முடிந்தால் உங்களுடைய வீட்டில் துளசிச் செடிக்கு அருகிலேயே ஒரு நெல்லிச் செடியை வளர்த்து வாருங்கள். நெல்லி செடியுடன் மாதுளை செடி, மருதாணி செடி இப்படிப்பட்ட மகாலட்சுமிக்கு உகந்த செடிகளை நம் வீட்டு வாசலில் வைத்து வளர்ப்பதும் நம் வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் இந்த பொருட்கள் எல்லாம் நிறைந்திருந்தாலே போதும். பீரோவில் இருக்கும் பணத்திற்கு குறைவே வராது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.