தேவையற்ற பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் எப்போதும் மன நிம்மதி இருக்க, தினமும் மாலையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்தாலே போதும்.

deepam1

பெரிய வசதி படைத்தவர்களாக இருந்து, பெரிய பங்களாவில் வசித்து வந்தாலும் சரி, சிறிய வீடாக ஒரு கூரை வீட்டை அமைத்துக் கொண்டு வசித்து வந்தாலும் சரி, வாடகை வீட்டில் குடி இருந்தாலும் சரி, வீடு என்பது வெறும் செங்கல் சிமெண்ட் கொண்டு மட்டும் கட்டப்பட்டதாக இருக்கக்கூடாது. சொந்தம் பந்தம் சந்தோஷம் பாசம் இன்பம் துன்பம் இப்படி எல்லாமும் கலந்து கட்டப்பட்ட ஒரு இல்லமாக இருக்க வேண்டும். உங்களது வீட்டை சந்தோஷம் நிறைந்த, சொந்தபந்தங்கள் சேர்ந்த, இனிமையான இல்லமாக மாற்ற வேண்டும் என்றால், வீட்டில் சண்டை சச்சரவுகள் என்பது இருக்கக் கூடாது, சுபகாரியத் தடை இருக்கக் கூடாது, கெடுதல்கள் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு.

deepam8

எந்த ஒரு வீட்டில் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றதோ, அந்த வீட்டில் சுபிட்சம் இருக்காது. மகாலட்சுமி மனநிறைவோடு தங்கவே மாட்டாங்க! இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். வீட்டில் வரக்கூடிய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு பரிகாரங்கள் என்று பார்த்தால் நிறைய உள்ளது. வழிபாடு என்று பார்த்தால் நிறையவே உள்ளது. அதில் மிக மிக எளிய வழிபாட்டு முறையை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் அழகாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். மேக்கப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை. முகம் கழுவி, தலை திருத்தி, பொட்டு இட்டுக்கொண்டு, முடிந்தால் தலைநிறைய பூ வைத்துக் கொண்டு இருந்தாலே போதும். அதன் பின்பு, பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

women1

பூஜை அறையில் தரையில் மஞ்சளைக் கொண்டு நட்சத்திர கோலத்தை வரைந்து கொள்ளுங்கள். இந்த மஞ்சள் நட்சத்திரக் கோலம் உங்களுடைய வீட்டில் மன அமைதியைக் கொடுக்கும். சண்டை சச்சரவுகளை தீர்க்கும். தேவையற்ற அசுபகாரியங்கள் நடக்காமல் தடுக்கும். மஞ்சள் பொடியைக் கொண்டு ஸ்டார் கோலத்தை வரைந்து கொள்ள வேண்டும். அந்தக் கோலத்தில் மேலே இரண்டு வேப்ப இலைகள் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெப்பநிலையானது, உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை அழிப்பதற்காக.

- Advertisement -

அந்த வேப்பிலையின் மேல் இரண்டு மண் அகல் தீபத்தை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தாலே போதும். தொடர்ந்து இந்த தீபத்தை 48 நாட்கள் ஏற்றி பாருங்களேன்! உங்களுடைய சாதாரண வீடும், இனிமையான இல்லமாக, இனிமையான கோவிலாக மாறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே இல்லை.

star

தினமும் அந்த பழைய மஞ்சள் நட்சத்திர கோலத்தை துடைப்பத்தால் சுத்தம் செய்யக்கூடாது. ஒரு சுத்தமான துணியை கொண்டு ஒரு பேப்பரில் எடுத்து, கால் படாத இடத்தில் மஞ்சளை கொட்டிவிடலாம். மீண்டும் தினந்தோறும் புது மஞ்சளை வைத்து தான் கோலம் வரைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

veppilai-agal-deepam

48 நாட்கள் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்ற முடியாது என்று சொல்பவர்கள் கூட உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் திடீரென்று அதிகமாக உள்ளது. வீட்டில் சுப காரியத்தை நடக்கவே முடியவில்லை, வெள்ளிக்கிழமை பூஜை கூட செய்ய முடியவில்லை, மனசு ஏதோ சஞ்சலமாக உள்ளது எனும் பட்சத்தில் உடனடியாக இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் உடனடியாக அகற்றப்பட்டு வீட்டில் நிம்மதி நிலவும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. முயற்சி செய்து பாருங்கள். நன்மையே நடக்கும்.