நீங்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தாலும் அல்லது சொந்த வீட்டுக்குக் குடிபோனாலும், பழைய வீட்டில் இதை மட்டும் செய்ய மறக்காதீங்க! நீங்க கூடி போகும் புது வீட்டில் சுபிட்சமா இருப்பீங்க!

house
- Advertisement -

நீங்கள் ஒரு வாடகை வீட்டில் இருந்து மற்றொரு வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தாலும் சரி, அல்லது வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தாலும் சரி, சூழ்நிலை காரணமாக உங்கள் சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டுக்கு குடி போனாலும் சரி, பின் சொல்லக்கூடிய விஷயங்களை செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் குடியிருந்த பழைய வீட்டிற்கும் நன்மையை கொடுக்கும். அது என்ன விஷயம், அதை எதற்காக செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கும் சாஸ்திர சம்பிரதாயம், சடங்குகளின் மீது நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை பின்பற்றலாம்.

new-house-graga

பொதுவாகவே ஒரு வீட்டில் இருந்து நாம் மற்றொரு வீட்டிற்கு குடி பெயர்ந்து செல்லும் போது, நாம் வசித்து வந்த பழைய வீட்டில், மீண்டும் புதியதாக குடி வருபவர்களும் நன்றாக வாழ வேண்டும் என்று கட்டாயம் நினைக்க வேண்டும். நம்முடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் துக்கங்கள் சந்தோஷம் எல்லாவற்றையும் பார்த்து நாம் வாழ்ந்த வீடு அது. அந்த வீட்டில் வேறு ஒருவர் கூடி வந்தாலும் அவர்கள் லட்சுமி கடாட்ச தோடு சுபிட்சமாக வாழவேண்டும் என்ற எண்ணம் கட்டாயமாக நமக்கு இருக்க வேண்டும்.

- Advertisement -

பொதுவாகவே ஒரு வீட்டை காலி செய்து செல்லும்போது, அந்த வீட்டை சுத்தமாக துடைத்துவிட்டு போகக்கூடாது. நாம் பயன்படுத்திய ஏதாவது ஒரு பொருளை அந்த வீட்டில் கட்டாயம் விட்டு செல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது அந்த வீட்டின் ஐஸ்வர்யத்தை மொத்தமாக நாம் துடைத்து எடுத்து போய்விடக்கூடாது. அந்த வீட்டில் மீண்டும் குடி வருபவர்களுக்கும், அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கும் லட்சுமி கடாட்சத்தை நாம் மிச்சம் வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

manjal-uppu

நீங்கள் உங்களுடைய வீட்டை எப்படி காலி செய்து சென்றாலும் சரி, உங்களது ஹவுஸ் ஓனருக்கு நீங்கள் தங்கியிருந்த வீட்டை சுத்தம் செய்து விட்டு சென்றாலும் சரி, இல்லை அப்படியே குப்பை கூளங்களோடு விட்டு சென்றாலும் சரி, ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான தண்ணீராக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு மஞ்சள் பொடியை போட்டு கரைத்து பூஜை அறையில் மட்டும் கொஞ்சமாக தெளித்து விட்டு செல்ல வேண்டும். அப்படி அந்த தண்ணீரை தெளித்து விடும்போது, இந்த வீட்டில் குடி வருபவர்களும் ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தெளித்து விடுங்கள். இப்படி செய்தால் அந்த வீட்டில் மீண்டும் புதியதாக கூடி வருபவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள்.

- Advertisement -

இப்படி மஞ்சள் தண்ணீரை தெளித்தால், உங்கள் வீட்டு ஐஸ்வரியம் எக்காரணத்தைக் கொண்டும் உங்களை விட்டுப் போகாது. நீங்கள் செல்லும் புது வீட்டில் நிச்சயம் நீங்கள் சுபிட்சமாக இருப்பீர்கள். புது வீட்டிற்கு முதன்முதலாக செல்லும்போது கட்டாயம் முதலில் நிறை குடம் தண்ணீர், கல்லுப்பு, மஞ்சள் தூளுடன் தான் செல்ல வேண்டும். சிலபேர் அவரவர் வீட்டு வழக்கப்படி துவரம்பருப்பு, மிளகாய், அரிசி, பச்சரிசி, நெல், சமையலுக்கு தேவையான இன்னும் சில பொருட்களையும் சேர்த்து எடுத்துச் செல்வார்கள். அது அவரவருடைய விருப்பம்.

milk

இப்படியாக புது வீட்டிற்கு நீங்கள் குடி செல்லும்போது கொஞ்சமாக புதிய மண் அகல் விளக்கில் மஞ்சள்தூளை கோபுரமாக வைத்து எடுத்துச் செல்வது உங்களுடைய புது வீட்டிற்கு சுபிட்சத்தை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் புது வீட்டிற்கு சென்றால் முடிந்தவரை பசும் பாலைக் காய்ச்சுங்கள். பசும்பாலை காய்ச்சி இறக்கிய பின்பு சர்க்கரை, சிறிது ஏலக்காய் தூளையும் போட்டு, சாமிக்கு நிவேதனமாக படைத்து விட்டு, உங்கள் வீட்டிற்கு வருகை தருபவர்களுக்கு கொடுக்கலாம்.

- Advertisement -

Elakkai

உங்கள் வீட்டு முறைப்படி எதை எப்படி செய்தாலும் சரி பழைய வீட்டில் இருந்து உங்கள் ஜாமான்களையெல்லாம் எடுத்து சுத்தமாக காலி செய்து விட்டு, சாவியை வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை பூஜைஅறையில் தெளித்து விட மறந்துவிடாதீர்கள். இந்த ஒரு செயல்பாடு உங்களுக்கும் சுபிட்சத்தை தேடித்தர போகின்றது. அந்த வீட்டில் குடி வருபவர்களுக்கும் ஐஸ்வர்யத்தை தேடி தரப்போகிறது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
12 ராசிக்காரர்களுக்கும் தங்கள் ராசிக்குரிய மரத்தை வளர்த்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்! உங்கள் ராசிக்கு நீங்கள் நட வேண்டிய மரம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -