தடங்கல்கள் நீங்கி நினைத்தது நிறைவேற தொடர்ந்து 48 நாட்கள் இந்த 2 தீபங்களை உங்களுடைய வீட்டில் இப்படி ஏற்றி வாருங்கள் போதும்.

vilakku-pray

நம்முடைய வாழ்க்கையில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வது என்பது மிக மிக கஷ்டமான விஷயம். நினைத்தது நிறைவேற வேண்டும் என்றால் அந்த குறிக்கோளை நோக்கி நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி முயற்சிகள் எடுக்கும் போது சில தடைகள், தடங்கல்கள், சில தோல்விகள் வரத்தான் செய்யும். அதை கண்டு துவண்டு விடக்கூடாது. விழுந்தவன் மீண்டும் மீண்டும் எழுந்து ஓடினால் தான் இலக்கை அடைய முடியும். அந்த வரிசையில் நீங்கள் நினைத்தது நிறைவேற வேண்டுமென்றால் உங்களுடைய விடாமுயற்சியோடு, சேர்த்து ஆண்டவனிடம் இந்த முறைப்படி உங்களுடைய வேண்டுதலை வைத்தால் நிச்சயமாக நினைத்தது நடக்கும்.

nei-deepam

உங்கள் மனதில் வைத்திருக்கும் வேண்டுதலை இறைவனிடம் மனம் உருகிச் சொல்லுங்கள். காலையில் 2 நெய் தீபங்களை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். குலதெய்வம் இஷ்ட தெய்வம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றினாலும் தவறு கிடையாது. சிறிய மண் அகல்விளக்கு போதும். சாதாரண மண் அகல் விளக்கை விட சிறிய அளவில் விளக்குகள் கிடைக்கின்றன. அந்த மண் அகல் விளக்கில் இரண்டை வாங்கி உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் சுத்தமான நெய் விட்டு மஞ்சள் நிற திரிபோட்டு தொடர்ந்து தீபம் ஏற்றி இறைவனிடம் உங்களது வேண்டுதலை வைக்க வேண்டும். தீபம் ஏற்றி முடித்துவிட்டு, அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி இந்த மந்திரத்தை 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை உச்சரியுங்கள். இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ‘ஓம் ஹீம் ஹீம் ஹீம்’.

deepam2

இந்த மந்திரம் எதற்காக? உங்களுடைய வாழ்க்கையில் நடக்க வேண்டியதை, நடக்க விடாமல் தடுக்கக்கூடிய, சில விஷயங்கள் உங்களை சுற்றி நடந்து கொண்டிருந்தால், எதிர்மறை ஆற்றலினால் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறாமல் தடைபட்டு வரும் பட்சத்தில், அந்த தடைகளை தகர்க்க கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

- Advertisement -

தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு இந்த பூஜையை செய்து முடித்துவிட்டு, அதன் பின்பு தினசரி வேலையை துவங்கலாம். எந்த ஒரு விஷயத்தை வேண்டுமென்றாலும் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டு இந்த பூஜையை தொடங்கலாம். நல்ல வேலை கிடைக்க வேண்டும். உடல் நிலை சரியாக வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும். குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.

color-thiri

இப்படி எந்த நல்ல விஷயத்தை கேட்டாலும் அது நிச்சயமாக நிறைவேறும். அவ்வளவு சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரம் இது. நீங்கள் நெய் தீபம் ஏற்ற பயன்படுத்தப் போகும் அந்த நெய் சுத்தமான நெய்யாக இருக்க வேண்டும். அதாவது நாம் சாப்பிட பயன்படுத்தக்கூடிய நெய்யில்தான் தீபம் ஏற்ற வேண்டும். எச்சில் செய்த நெய்யில் தீபம் ஏற்றி விடக் கூடாது.

ghee

அந்த நெய் அவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதற்காக சொல்லப்பட்டுள்ள விஷயம். சாப்பிடுவதற்காக வாங்கக்கூடிய நெய்யை தனியாக வாங்கி பூஜை அறையில் வைத்து அதில் தீபம் ஏற்றுங்கள். இந்த வேண்டுதலை உங்களுக்காகவும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்காக, உங்கள் கனவுகளுக்காக வேண்டியும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக நல்ல பலன் உண்டு என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.