- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமந்த புத்தி விலக பிள்ளையார் வழிபாடு

மந்த புத்தி விலக பிள்ளையார் வழிபாடு

- Advertisement -

சில பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள்.  சிலருக்கு மந்தமான புத்தி இருக்கும். சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய திறன் இருக்காது. படிப்பதில் ஆர்வம் குறைவாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க, பெரியவர்களுக்கு கூட சில பேருக்கு புத்தியானது மந்தமாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. வேலையில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். புது விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய திறனும் அவர்களுக்கு இருக்காது.

வியாபாரத்திலும் திறமையாக சாதிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மந்த புத்தி விலகி, சுறுசுறுப்பு வர, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ள, செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் செய்வது சிறப்பு. நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை சதுர்த்தி வந்திருக்கிறது. இந்த நாளில், இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் அதிசக்தி வாய்ந்த பலனை உங்களுக்கு கொடுக்கும். விநாயகருக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போட்டு பாருங்க. மந்த புத்தியானது உடனே தெளியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

“வல்லபம் கஜானனம் ஏகதந்தம்” இந்த மூன்று வார்த்தைகளும் சேர்ந்தது ஒரு மந்திரம். 27 முறை இந்த மந்திரத்தை எழுத வேண்டும். சின்ன சின்ன காகிதமாக வெட்டி, இந்த மந்திரத்தை அந்த பேப்பரில் எழுதி விடுங்கள். ஒரு வார்த்தைக்கு கீழே இன்னொரு வார்த்தையை எழுதலாம் தவறு ஒன்றும் கிடையாது. எழுதிய இந்த மந்திர வார்த்தைகளை சுருட்டி ஒரு மாலை போல கட்டி விநாயகருக்கு மாலை போட வேண்டும்.

- Advertisement -

ஸ்ரீ ராம ஜெயம் எப்படி எழுதி, அந்த பேப்பரை சுருட்டி மாலை கட்டி போடுவோமோ அதேபோல, இந்த மந்திரத்தை எழுதி விநாயகருக்கு மாலையாக போட்டால், மந்த புத்தி விலகும் என்பது நம்பிக்கை. பெரியவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மாணவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தங்களுடைய பிள்ளைகளுக்காக தாய் தந்தையினர் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை வழிபாடு

குறைந்தபட்சம் 27 முறை இந்த மந்திரத்தை எழுதி மாலையாக கட்டிப் போடலாம். அதிகபட்சம் 108 முறை பேப்பரில் எழுதி கூட மாலையாக கட்டி நீங்கள், விநாயகருக்கு போடலாம். தவறு கிடையாது. இந்த மாலையை தொடர்ந்து விநாயகருக்கு போடும்போது பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெறுவதை கண்கூடாக பார்ப்பீர்கள். தேர்வுக்கு சென்றால், படித்ததெல்லாம் மறந்து போகிறது என்ற பிரச்சனை கூட இந்த வழிபாட்டை செய்தால் சரியாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்